/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் பதவி அதிகார பகிர்வு விவகாரம் சிவகுமார் வீட்டுக்கு இன்று செல்கிறார் சித்து
/
முதல்வர் பதவி அதிகார பகிர்வு விவகாரம் சிவகுமார் வீட்டுக்கு இன்று செல்கிறார் சித்து
முதல்வர் பதவி அதிகார பகிர்வு விவகாரம் சிவகுமார் வீட்டுக்கு இன்று செல்கிறார் சித்து
முதல்வர் பதவி அதிகார பகிர்வு விவகாரம் சிவகுமார் வீட்டுக்கு இன்று செல்கிறார் சித்து
ADDED : டிச 02, 2025 04:30 AM

பெங்களூரு: முதல்வர் பதவி குறித்து அதிகாரம் பகிர்வு விவகாரம் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல்வர் சித்தராமையா வீட்டுக்கு, துணை முதல்வர் சிவகுமார் இரண்டு நாட்களுக்கு முன் சிற்றுண்டி சாப்பிட்டார். இதற்கு பதிலாக, இன்று காலை சிற்றுண்டிக்கு வரும்படி முதல்வருக்கு துணை முதல்வர் அழைப்பு விடுத்து உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், 2023ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. ஆட்சிக்கு வருவதற்கு உழைத்த மாநில தலைவரான சிவகுமாருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின், முதல்வர் பதவி சிவகுமாருக்கு வழங்குவதாகவும், சித்தராமையா அப்பதவியில் இருந்து விலகுவதாகவும், ஆட்சி அமைந்தபோது, கட்சி மேலிட தலைவர்கள் முன்னிலையில் 'வாய்மொழி ஒப்பந்தம்' போடப்பட்டது.
இரு தரப்பு அதன்படி, காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என்று சிவகுமார் அடம் பிடித்து வருகிறார். சித்தராமையா, அப்பதவியை விட்டுத்தர மாட்டேன் என்று மறைமுகமாக கூறி வந்தார்.
ஆனால், இரு தரப்பு ஆதரவாளர்களும், தங்கள் தலைவருக்கு தான் பதவி என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறிவந்தனர். மேலிடத்திலும் காய்கள் நகர்த்தினர்.
இது காங்கிரஸ் ஆட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், குழப்பத்துக்கு முடிவு கட்டும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி, சிவகுமாரை, தன் வீட்டுக்கு அழைத்து சித்தராமையா, இரண்டு நாட்களுக்கு முன் சிற்றுண்டி அளித்தார். அப்போது இருவரும் 'ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை' என்று கூட்டாக பேட்டி அளித்தனர்.
சகோதரர்கள் இந்நிலையில், நேற்று துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
முதல்வர் சித்தராமையாவை இன்று காலை 9:30 மணிக்கு சிற்றுண்டிக்கு வரும்படி என் வீட்டிற்கு அழைத்துள்ளேன். சிற்றுண்டி விஷயம் எனக்கும், முதல்வருக்கும் சம்பந்தப்பட்டது. நாங்கள் இருவரும் சகோதரர்கள் போன்று பணியாற்றி வருகிறோம்.
ஊடகத்தினர் தான் நாங்கள் தனித்தனி அணி என்று குறிப்பிடுகின்றனர். எங்களில் எந்த அணியும் இல்லை. எங்களுடன் 140 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நான் பிறக்கும்போது ஒருவனாக பிறந்தேன்; இறக்கும்போதும் ஒருவர் தான்.
கட்சி விஷயம் என்று வரும்போது, அனைவரையும் ஒற்றுமையாக அழைத்து செல்வேன். இது குறித்து யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்வர் வீட்டுக்கு முதல்வர் செல்லும் விஷயம், கர்நாடகா மட்டுமின்றி, ஒட்டுமொத்த காங்கிரசிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

