
சமூக அக்கறையுள்ள கதை
ர ாஜேந்திர சிங் பாபு இயக்கிய, 'ரக்த காஷ்மீரா' திரைப்படம், திரைக்கு வர தயாராக உள்ளது. இதில் உபேந்திரா, ரம்யா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். கதை குறித்து, இயக்குநர் கூறுகையில், ''இது சமூக அக்கறையுள்ள கதை கொண்டது. பயங்கரவாதிகளை எதிர்த்து எப்படி போராடுவது என, சிறார்களுக்கு நாயகன் பயிற்சி அளிக்கிறார். அதன்படியே சிறார்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்புகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட ச ிறார்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, பல ஆண்டுகள் ஆகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களால், திரைக்கு வருவது தாமதமானது. விரைவில் திரைக்கு கொண்டு வருவோம்,'' என்றார்.
1980களில் நடக்கும் கதை!
ந டிகர் வினோத் பிரபாகர் நாயகனாக நடிக்கும், ப லராமன தினகளு திரைப்படம், 2026 ஜனவரியில் திரைக்கு வரவுள்ளது. இது பற்றி இயக்குநர் சைதன்யா கூறுகையில், ''இந்த படத்தில் தமிழின் பிரபல இயக்குநர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இது அவரது 51வது படாமகும். டிசம்பரில் முதல் பாடலை வெளியிடுவோம். வினோத் பிரபாகருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். 1980களில் நடக்கும் கதையை படமாக்கியுள்ளோம். படப்படிப்பு முடிந்துள்ளது. திரைக்கு கொண்டு வர தயா ர ாகிறோம்,'' என்றார்.
பேய்கள் குறித்து ஆராய்ச்சி!
க ன்னடத்தில் அவ்வப்போது, திகில் திரைப்படங்கள் வருகின்றன. இந்த வரிசையில், த ந்திரா வ ும் சேர்ந்துள்ளது. கதை குறித்து, படக்குழுவினர் கூறுகையில், ''படத்தில் சசிகாந்த் நாடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளரும் அவரே. ஆய்வு குழுவொன்று ஆவிகள், பேய்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதனால் அவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் இருந்து, அவர்கள் எப்படி தப்புகின்றனர் என்பதே கதையின் சாராம்சம். பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும், பல காட்சிகள் உள்ளன,'' என்றார்.
மேக்னா ராஜ் 2வது திருமணம்?
ந டிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணத்துக்கு தயாராவதாக, சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது. இது குறித்து, அவரது தந்தையும், மூத்த நடிகருமான சுந்தர்ராஜிடம் கேட்ட போது, ''எப்போதும் ஒரு மைனசை பிளஸ் ஆக்கிக்கொள்ளுங்கள் என, கூறுவோம். திருமணமான இரண்டே ஆண்டில், என் மருமகன் சிரஞ்சீவி சர்ஜா காலமானார்.
' 'மேக்னாவுக்கு இன்னும் சிறு வயதுதான். ஆனால் திருமணம் என்பது, புனிதமான பந்தம். தனியாக இருந்தால் அது வேறு விஷயம். இப்போது ஒரு குழந்தை உள்ளது. என் மகள் மேக்னாவை மறுமணம் செய்பவர், என் பேரனை தன் மகனாக பார்ப்பாரா. அனைத்தையும் அலசி, ஆராய்ந்து மறுமணம் வேண்டுமா, வேண்டாமா என்பதை மேக்னா முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

