தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சினி கடலை

 சினி கடலை

 சினி கடலை


ADDED : பிப் 09, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எதிர்பாராத சம்பவம்

கோபம் என்பது சிறிய தீப்பொறி போன்றதாகும். அது வாழ்க்கையை புரட்டி போட்டு விடும். தெரிந்தோ, தெரியாமலோ நாம் கோபம் கொண்டால் நமக்கு நரகத்தை காட்டி விடும். பலர் பாதை மாறி ரவுடிகளாக, தாதாக்களாக கோபமே காரணமாகிறது. இத்தகைய அம்சங்களை மையமாக கொண்டு, திரைக்கு வர தயாரகிறது ஜேசி திரைப்படம்.

இதில் ரவுடியிசம் மட்டுமல்ல, காதல், நட்பு, குடும்ப சென்டிமென்ட், எமோஷன் என, அனைத்தும் உள்ளது. ஒரு அப்பாவி இளைஞன் தானுண்டு... தன் வேலையுண்டு என இருக்கிறார். இவரது வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. இது அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே கதையின் சாராம்சமாகும்.

* பண்டைய கால வீடு

மஞ்சு ஸ்வராஜ் இயக்கத்தில், அஜய்ராவ் நடிப்பில் சரள சுப்பராவ் திரைப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. இம்மாதம் 12ல், இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இது இலக்கியவாதி திரிவேணியின் படைப்பை மையமாக கொண்டதாகும். இதுவரை அவரது பல கதைகள், திரைப்படமாகி வெற்றி பெற்றுள்ளன. இப்போது மற்றொரு கதை, திரைப்படமாகிறது. 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட மைசூரின் வீடு ஒன்றில், படப்பிடிப்பு நடந்துள்ளது. ரங்காயணா ரகு, வீணா சுந்தர் உட்பட, பலர் நடித்துளனர். குடும்பத்துடன் பார்க்கும் வகையில், கதையை கொண்டு சென்றுள்ளனர். மிஷா நாரங்க் நாயகியாக நடித்துள்ளார்.

* மவுசு குறையாத தர்ஷன்

ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் சிறையில் இருந்தாலும், அவருக்கு மவுசு குறையவில்லை. அவர் மீது ரசிகர்களுக்கு உள்ள அன்பு, சிறிதும் குறையவில்லை. பிப்ரவரி 16ல் அவரது பிறந்த நாளை கொண்டாட, ரசிகர்கள் தயாராகின்றனர். தர்ஷனின் பிறந்த நாளை முன்னிட்டு, தர்ஷன் நடிப்பில் வசூலை அள்ளிய கரியா திரைப்படம், ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

சமீபத்தில் இவர் நடித்த டெவில் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இவரது தொழில் வாழ்க்கையில், திருப்பு முறையாக அமைந்தது 'கரியா' திரைப்படம். இதை ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. ரசிகர்களும் குஷியடைந்துள்ளனர்.

* நீண்ட இடைவெளிக்கு பின்...

கன்னடத்தில், சாந்தி கிராந்தி திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சங்கீதா. அதன்பின் தமிழ், மலையாள மொழிகளில், அடுத்தடுத்த படங்களில் நடித்தார். கடந்த 200-0ல் திரைக்கு வந்த, யாரே நீ அபிமானி திரைப்படத்துக்கு பின், அவர் கன்னடத்தில் நடிக்கவில்லை.

அதே ஆண்டில் புகைப்பட கலைஞர் சரவணனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். நடிப்புக்கு முழுக்கு போட்டார். நீண்ட இடைவெளிக்கு பின், மலையாள படங்களில் இப்போது கன்னடத்துக்கும் வந்துள்ளார். கிரண் விஸ்வநாத் இயக்கும் ஏழுமலை திரைப்படத்தில், நாயகனின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

* கதை ரகசியம்

இயக்குனர் திலீப்குமார் இயக்கும், திரிகாரம் திரைப்பட டைட்டில் பாடல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஹர்ஷவர்த்தன் நாயகனாக, அவருக்கு ஜோடியாக நிஷ்விதா ஷெட்டி நடிக்கின்றனர். நிஷ்விதாவின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சித்ரதுர்கா, சிக்கமகளூரு, மாரிகனிவே, மைசூரு, தாவணகெரே உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் திரையிட திட்டமிட்டுள்ளனர். படம் மாறுபட்ட கதை கொண்டதாகும். கதை வெளியே கசியாமல், படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.

* பாசப்பிணைப்பு

லைலாஸ் ஸ்வீட் ட்ரீம்ஸ் என்ற தலைப்பில், புதிய திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இதில் நடிகை சைத்ரா ஆச்சார் நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டது. பல்வேறு குறும்படங்களை இயக்கிய சக்தி பிரசாத், இந்த திரைப்படம் மூலம் இயக்குனராகி உள்ளார். தாய் மற்றும் மகள் இடையிலான பாசப்பிணைப்பை கூறும் படமாகும். லைலா என்ற கதாபாத்திரத்தில் சைத்ரா நடிக்கிறார். இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையை கேட்டவுடன் நடிக்க சம்மதித்துள்ளார்.

***

பாசப்பிணைப்பு

லைலாஸ் ஸ்வீட் ட்ரீம்ஸ் என்ற தலைப்பில், புதிய திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இதில் நடிகை சைத்ரா ஆச்சார் நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டது. பல்வேறு குறும்படங்களை இயக்கிய சக்தி பிரசாத், இந்த திரைப்படம் மூலம் இயக்குநராகி உள்ளார். தாய் மற்றும் மகள் இடையிலான பாசப்பிணைப்பை கூறும் படமாகும். லைலா என்ற கதாபாத்திரத்தில் சைத்ரா நடிக்கிறார். இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையை கேட்டவுடன் நடிக்க சம்மதித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us