/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மனைவி அடிக்கிறா சார்...' போலீசாரிடம் ரவுடி அலறல்
/
'மனைவி அடிக்கிறா சார்...' போலீசாரிடம் ரவுடி அலறல்
'மனைவி அடிக்கிறா சார்...' போலீசாரிடம் ரவுடி அலறல்
'மனைவி அடிக்கிறா சார்...' போலீசாரிடம் ரவுடி அலறல்
ADDED : ஜன 07, 2026 12:03 AM
ஜே.ஜே.நகர்: மனைவி தன்னை தாக்கி, கண்ணில் கத்தியால் குத்தினார், கையை முறித்தார் என, போலீசாரிடம் ஒரு ரவுடி புகார் அளித்தார்.
பெங்களூரின் ஜே.ஜே.நகரில் வசிப்பவர் சையத் அஸ்கர், 30. ரவுடியான இவர் மீது கஞ்சா விற்றது, திருட்டு, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் உள்ளன. வழக்கொன்றில் கைதான இவர், சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையானார்.
இந்நிலையில் நேற்று ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்துக்கு, ரத்த காயங்களுடன் ஓடி வந்தார். 'என் முதல் மனைவி என்னை தாக்கி, கையை முறித்தார்; கண்ணில் கத்தியால் குத்தினார்; என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்' என புகார் செய்தார்.
ரவுடி சையத் அஸ்கரின் முதல் மனைவி, இதற்கு முன்பும் கையில் அரிவாளுடன் கணவருக்கு வீடியோ அனுப்பி, 'உன் தலையை வெட்டுவேன்; இரண்டு நாட்கள் பொறுத்திரு' என மிரட்டி இருந்தாராம். இப்போது நேரில் வந்து தாக்கியதாக ரவுடி புகார் அளித்தார். அவருடன், இரண்டாவது மனைவியும் வந்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், விசாரணையை துவக்கியுள்ளனர்.

