தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பஜனை பாடி உள்ளிருப்பு போராட்டம்; சட்டசபையில் துாங்கிய எதிர்க்கட்சியினர்

 பஜனை பாடி உள்ளிருப்பு போராட்டம்; சட்டசபையில் துாங்கிய எதிர்க்கட்சியினர்

 பஜனை பாடி உள்ளிருப்பு போராட்டம்; சட்டசபையில் துாங்கிய எதிர்க்கட்சியினர்


ADDED : பிப் 05, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு : கலால் அமைச்சர் திம்மாபூர் ராஜினாமா செய்ய கோரி, சட்டசபையில் நேற்று முன்தினம் இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய, எதிர்க்கட்சி உறுப்பினர் பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலால் துறையில் நடக்கும் ஊழலுக்கு பொறுப்பு ஏற்று, அந்த துறையின் அமைச்சர் திம்மாபூர் பதவி விலக கோரி, சட்டசபையில் பா.ஜ., போராட்டம் நடத்தியது. நேற்று முன்தினம் இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்ட பா.ஜ., உறுப்பினர்களும், கூட்டணியில் உள்ள ம.ஜ.த., உறுப்பினர்களும் இரவு சட்டசபையிலேயே துாங்கினர். துாங்குவதற்கு முன் அரசுக்கு எதிராகவும், அமைச்சர் பதவி விலக கோரியும் பஜனை பாடி போராட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்தனர்.

ரிசர்வ் வங்கி நேற்று காலை சட்டசபை துவங்கியதும், ஜி ராம் ஜி சட்டம் குறித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச கூடாது என்பதால், திம்மாபூர் ராஜினாமா கோரி, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், ''கலால் துறையில் 6,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து உள்ளது. அமைச்சருக்கு எதிரான ஆவணங்களை கொடுத்தும், அவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யாமல் உள்ளார். கர்நாடகாவை காங்கிரஸ் மேலிடம் ஏ.டி.எம்., ஆக பயன்படுத்தவில்லை. ரிசர்வ் வங்கியாக பார்க்கிறது,'' என்றார்.

சட்டசபைக்கு வெளியே அமைச்சர் திம்மாபூர் அளித்த பேட்டியில் கூறுகையில், ''நான் எந்த தவறும் செய்யவில்லை. ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் சதி. எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர் என்பதால், அமைச்சர்கள் ராஜினாமா செய்தால் அரசை நடத்த முடியுமா. அவர்கள், முதல்வர் ராஜினாமாவை கூட கேட்பர். எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றனர். இதற்கு கட்சி மேலிடத்தின் அழுத்தமும் காரணமாக இருக்கலாம். அதிகாரிகள் தவறு செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரை சந்தித்து விளக்கம் அளித்தேன்,'' என்றார்.

நாடகம் துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''பா.ஜ., ஆட்சியில் எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு நடந்தது. இதற்கு பொறுப்பு ஏற்று யார் ராஜினாமா செய்தார். அவர்கள் ஆட்சியில் இருந்த போது, கலால் துறையில் நடந்த ஊழல்கள் பற்றி, திம்மாபூர் சட்டசபையில் கூறியதால் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்.

''அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, எந்த ஆதாரமும் இல்லை. நாங்களும் உள்ளோம் என்று காட்டுவதற்காக, எதிர்க்கட்சியினர் தினமும் ஒரு நாடகம் போடுகின்றனர். தலித் என்பதால் திம்மாபூருக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us