தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/திறன் மேம்பாட்டு மாநாடு துவக்கம் வெளிநாடுகளின் துாதர்கள் பங்கேற்பு

திறன் மேம்பாட்டு மாநாடு துவக்கம் வெளிநாடுகளின் துாதர்கள் பங்கேற்பு

திறன் மேம்பாட்டு மாநாடு துவக்கம் வெளிநாடுகளின் துாதர்கள் பங்கேற்பு


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் மூன்று நாட்கள் நடக்கும் திறன் மேம்பாட்டு மாநாடு நேற்று துவங்கியது. வெளிநாடுகளின் துாதர்கள் பங்கேற்றனர். கர்நாடகாவின் தொழில்துறை வளர்ச்சியில் அடுத்த அத்தியாயத்தை வடிவமைப்போம் என, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.

கர்நாடக அரசின் திறன் மேம்பாட்டு, தொழில்முனைவோர் மற்றும் வாழ்வாதார துறை சார்பில், ‘தொழிலாளர்கள் 2030: அளவு, அமைப்புகள், ஒருங்கிணைப்பு’ என்ற தலைப்பில், மூன்று நாட்கள் நடக்கும் 2 வது திறன் மேம்பாட்டு மாநாடு, பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள தி லலித் அசோக் ஹோட்டலில் நேற்று துவங்கியது.

தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் இணைந்து, மாநாட்டை துவக்கி வைத்தனர்.

பெங்களூரில் உள்ள ஜப்பான் துாதரக அலுவலகத்தின் துாதர் நவதா ஹிரோஷி, ஆஸ்திரேலிய துாதரக அலுவலக துாதர் ஸ்டீவன் கன்னோலி, கர்நாடகாவுக்கான பிரிட்டீஷ் துணை துாதர் ஹர்ஷ்பீர் சிங்கா, இந்தியாவுக்கான பலாவு குடியரசின் கவுரவ துாதர் நீரஜ் சர்மா, துனிசியா குடியரசின் கவுரவ துாதர் ஷபினா சுல்தானா, இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர் பங்கேற்றனர்.

மாநாடு துவங்கியதும், சீனாவின் ஷாங்காயில் நடந்த 48 வது உலக திறன் போட்டியில் பங்கேற்ற கர்நாடகாவை சேர்ந்த போட்டியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின், கர்நாடக கவுஷல்யா சம்பதா – 2026; கர்நாடக திறமையாளர்கள் நிலபரப்பு – 2026; கர்நாடக பணி வரைப்படம் – 2030 ஆகிய கையேடுகளை அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வெளியிட்டனர்.

அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேசுகையில், ‘‘எதிர்கால தேவைகளுக்கான தொழில்துறையை ஆதரிப்பதற்கு வலுவான தொழில்துறை சூழல், முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கையை கர்நாடகா வழங்குகிறது. நம்பிக்கையுடன் கர்நாடகாவில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு தேவையான திறமைகளை உருவாக்குவோம். கர்நாடகாவின் தொழில்துறை வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைப்போம்,’’ என்றார்.

இம்மாநாடு இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us