sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறிய காஸ் சிலிண்டர்கள் ஹோட்டல்களுக்கு சப்ளை?

 சிறிய காஸ் சிலிண்டர்கள் ஹோட்டல்களுக்கு சப்ளை?

 சிறிய காஸ் சிலிண்டர்கள் ஹோட்டல்களுக்கு சப்ளை?


ADDED : மார் 16, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பெங்களூரு நகரில் வர்த்தக ரீதியான காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஹோட்டல்களுக்கு சிறிய எல்.பி.ஜி., சிலிண்டர்களை வழங்குவது குறித்து விவாதிக்கப்படும்,'' என, உணவு பொது விநியோக துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஹோட்டல்களுக்கு சிறிய எல்.பி.ஜி., சிலிண்டர்களை வழங்குவது குறித்து, இன்று (16ம் தேதி) மாலை 4:00 மணிக்கு எரிவாயு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்துக்கு மாநில தலைமை செயலர் தலைமை வகிப்பார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு அவர் தெரிவிப்பார். எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் வந்துள்ளதால், பிரச்னைகள் படிப்படியாக குறையும் என்று நினைக்கிறோம்.போர் இன்னும் முடியவில்லை. எனவே உணவு தயாரிக்க எரிவாயுவை சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும்.

ஹோட்டல்களுக்கு சிறிய காஸ் சிலிண்டர் வழங்குவது குறித்து பேச்சு நடத்தப்படும். வணிக காஸ் சிலிண்டர் பற்றாக்குறையால், பெங்களூரில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. பல ஹோட்டல்கள் தங்கள் மெனுக்களை மாற்றி உள்ளனர். சிலர் விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us