தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாயை கொல்வேன் என மிரட்டல் தந்தையை கொன்ற மகன் கைது

 தாயை கொல்வேன் என மிரட்டல் தந்தையை கொன்ற மகன் கைது

 தாயை கொல்வேன் என மிரட்டல் தந்தையை கொன்ற மகன் கைது


ADDED : ஆக 15, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சமீபத்தில் விடுதலையான தந்தையை கொன்று வீசிய மகன் கைது செய்யப்பட்டார்.

ஷிவமொக்கா மாவட்டம், சா கர் தாலுகாவின் கோர க்கோடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்ராயா, 55. இவர், தனது தந்தை, தன் சகோதரியை கொலை செய்ததாக, கடந்த, 2010ல் ஆயுள் தண்டனை பெற்றார். 2023ல் விடுதலையானார்.

விடுதலையான இவர், மீண்டும் தன் மனைவியை கொல்ல முயற்சித்தார். இது தொடர்பாக அவரது மகன் ஜெயந்த், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, நடப்பாண்டு மே மாதம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து ஜாமினில் வந்த அவர், சொந்த ஊருக்கு செல்லாமல், வேறு கிராமத்தில் சென்று அங்கேயே வேலை பார்த்து வசித்து வந்தார். ஆறு நாட்களுக்கு முன் சுப்ராயா மீண்டும் ஊருக்கு சென்று, மனைவி, மகனை மிரட்டினார்.

மனைவியை கொன்று விடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்த அவரது மகன், இரண்டு நாட்களுக்கு முன், தன் தந்தை யை அரிவாளால் வெட்டி கொலை செய்து, கிணற்றில் வீசி விட்டு, போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us