தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய மகன்

தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய மகன்

தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய மகன்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜராஜேஸ்வரி நகர்: பெங்களூரின், ராஜராஜேஸ்வரி நகரில் வசிப்பவர் மனோகர் படேல், 62. இவர் டிம்பர் தொழிலதிபர். இவரது மகன் மனீஷ் படேல், 40. செப்டம்பர் 29ம் தேதியன்று, மனீஷ் பண விஷயம் தொடர்பாக, கதக்குக்கு ரயிலில் செல்வதாக தந்தையிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். மறுநாள் போன் செய்வதாக கூறியிருந்தார்.

மறுநாள் காலை 8:00 மணியளவில், மனீஷின் வாட்ஸாப் எண்ணில் இருந்து, மனோகர் படேலுக்கு அழைப்பு வந்தது. அதில் மகன் பேசவில்லை. மாறாக வேறு நபர் பேசினார். ‘உங்கள் மகனை கடத்தி வந்துள்ளோம். எங்களுக்கு 90 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். வழங்காவிட்டால் உங்கள் மகனை கொலை செய்வோம்’ என மிரட்டினார்.

நான்கைந்து முறை இதே போல் மிரட்டல் வந்தது. அதன்பின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆனது. பீதியடைந்த தந்தை மனோகர் படேல், ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் மனீஷ் படேலின் மொபைல் எண்ணை டிராக் செய்ய முயற்சித்தனர். மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே வேறொரு எண்ணில் இருந்து, மனோகர் படேலுக்கு அழைப்பு விடுத்த நபர், 'பணம் தயாராகிவிட்டதா' என, கேள்வி எழுப்பினார். இந்த எண்ணை போலீசார் டிராக் செய்த போது, ஹாசனில் இருப்பது இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், நேற்று முன்தினம் இரவு போன் இருந்த வீட்டை கண்டுபிடித்தனர்.

அந்த வீட்டில் மனீஷ் படேலும், அவரை கடத்தியதாக கூறப்பட்ட இரண்டு நபர்களும் அமர்ந்து ஜாலியாக பேசுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

அவர்களை விசாரித்த போது, மனீஷ் படேலின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது. எலக்ட்ரிகல் ஒப்பந்ததாரரான மனீஷ் படேலுக்கு, 1.5 கோடி ரூபாய் கடன் இருந்தது. இதை அடைக்கும் நோக்கில், நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கடத்தியதாக நாடகமாடி, தந்தையிடம் பணம் பறிக்க திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார். மூவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us