தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கள்ளக்காதலை கண்டித்த மகன் கொலை: தாய் கைது

கள்ளக்காதலை கண்டித்த மகன் கொலை: தாய் கைது

கள்ளக்காதலை கண்டித்த மகன் கொலை: தாய் கைது


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: கள்ளத்தொடர்பை கண்டித்த மகனை கொலை செய்த தாய் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

பெலகாவி நகர் போலீஸ் கமிஷனர் பிரகாஷ் நிகம் நேற்று அளித்த பேட்டி:

பெலகாவி நகரின், தேசிய நெடுஞ்சாலை அருகில் நவம்பர் 3ம் தேதி ஒரு வாலிபர் உடல் கிடந்தது. மாளமாருதி போலீசார் விசாரித்தனர். அவர் பெங்களூரில் வசித்த விஜய் நாராயண் 24, என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

பெங்களூரின், பியூட்டி பார்லர் ஒன்றில் மீனா, 44 என்ற பெண் மேனேஜராக பணியாற்றுகிறார். இவரது கணவர் நாராயண், சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.

தன் மகன் விஜய் நாராயணுடன் மீனா பெங்களூரில் வசிக்கிறார். இவரது பார்லரில் ராகேஷ், 40, அறிமுகமானார். இவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ராகேஷை தன் கார் ஓட்டுநராக மீனா வைத்து கொண்டார். அவ்வப்போது இவரது வீட்டுக்கு ராகேஷ் வருவார். இதை விஜய் நாராயண் கண்டித்தார். இதனால் கோபமடைந்த மீனா, மகனை கொல்ல சதி திட்டம் தீட்டினார்.

ஊருக்கு செல்லலாம் என நம்ப வைத்து நவம்பர் 1ம் தேதி பெலகாவிக்கு காரில் அழைத்து வந்தார். குளிர்பானத்தில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்தார். அதன்பின் ராகேஷும், கூட்டாளிகளும் அங்கு வந்து விஜய் நாராயணை சால்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

உடலை நெடுஞ்சாலை அருகில் வீசிவிட்டு தப்பியோடினர். மீனா, ராகேஷ் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளோம். கைதானவர்களில் ஒரு சிறுவனும் உள்ளார்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us