தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சொத்தை பிரித்து கொடுக்காத தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்கள்

 சொத்தை பிரித்து கொடுக்காத தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்கள்

 சொத்தை பிரித்து கொடுக்காத தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்கள்


ADDED : பிப் 17, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திராநகர்: சொத்தை பிரித்து கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் தந்தையை, இரண்டு மகன்கள் அடித்து கொன்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு இந்திராநகர் துாபனஹள்ளியில் வசித்தவர் முனிகிருஷ்ணப்பா, 70. ஓய்வு பெற்ற பி.எம்.டி.சி., கண்டக்டர். இவரது மகன்கள் மோகன்குமார், 39, கஜேந்திரா, 37. இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

மூன்று மாடி வீட்டில் முதல் மாடியில் முனிகிருஷ்ணப்பாவும், அவரது மனைவியும் வசித்தனர். இரண்டாவது மாடியில் கஜேந்திராவும், மூன்றாவது மாடியில் மோகன்குமாரும் வசித்தனர்.

இந்நிலையில், தந்தையின் சொத்துகளை பிரித்து கொள்ள மகன்கள் முடிவு செய்தனர். ஆனால், இதற்கு தந்தை ஒப்பு கொள்ளவில்லை. இதுதொடர்பாக தந்தை, மகன்கள் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 14ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் முனிகிருஷ்ணப்பாவை, மோகன்குமாரும், கஜேந்திராவும் சேர்ந்து ஹாக்கி மட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருவத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார்.

இதற்கிடையில், கஜேந்திராவிடம் இருந்து பிரிந்து வாழும் அவரது மனைவி திவ்யா அளித்த புகாரில், இந்திராநகர் போலீசார் மோகன்குமார், கஜேந்திரா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். தற்போது முனிகிருஷ்ணப்பா இறந்து விட்டதால் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மோகன்குமார் கைது செய்யப்பட்டார்.

கஜேந்திராவை போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us