/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விசாரணைக்கு ஆஜராக சோனு நிகமுக்கு சம்மன்
/
விசாரணைக்கு ஆஜராக சோனு நிகமுக்கு சம்மன்
ADDED : மே 04, 2025 11:33 PM

பெங்களூரு: பஹல்காம் சம்பவத்தில் கன்னடர்களை தொடர்புபடுத்தி பேசிய, பாடகர் சோனு நிகமுக்கு விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பெங்களூரு ஆவலஹள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த இசை நிகழ்ச்சியில், பிரபல பாடகர் சோனு நிகம் கடந்த 30ம் தேதி பங்கேற்றார். தொடர்ந்து ஹிந்தி பாடல்களை பாடினார். கன்னட பாடல்களை பாடும்படி மாணவர்கள் கோஷம் கூச்சலிட்டார்.
கன்னடம்.... கன்னடம் என்று இப்படி நீங்கள் கூச்சல் போடுவதால் தான் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று, சோனு நிகம் சர்ச்சை கருத்தை கூறினார்.
இதனை கன்னட அமைப்புகள் கண்டித்தன. அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆவலஹள்ளி போலீசில் புகார் செய்தனர். நேற்று முன்தினம் சோனு நிகம் மீது வழக்குப்பதிவானது. தனது கருத்துக்கு சோனு நிகம் மன்னிப்பும் கேட்டு உள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக சோனு நிகமுக்கு, ஆவலஹள்ளி போலீசார் வாட்ஸாப், மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பி உள்ளனர்.