தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பன்னரகட்டா பூங்காவிற்கு  தென் ஆப்பிரிக்க குரங்குகள்

 பன்னரகட்டா பூங்காவிற்கு  தென் ஆப்பிரிக்க குரங்குகள்

 பன்னரகட்டா பூங்காவிற்கு  தென் ஆப்பிரிக்க குரங்குகள்


ADDED : டிச 16, 2025 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்ஜாபூர்: வனவிலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பன்னரகட்டா பூங்காவிற்கு எட்டு கபுச்சின் குரங்குகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

விலங்குகளின் மரபணு பன்முகத்தன்மையை அதிகரிப்பது; பொது மக்களிடையே வனவிலங்குகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, வனவிலங்குகளை பரிமாற்றம் செய்யும் திட்டத்தின் கீழ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து நான்கு ஆண், நான்கு பெண் கபுச்சின் எனும் அடர் சுருட்டை வால் குரங்குகள், பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

இதற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் இருந்து, முன் ஒப்புதல் பெறப்பட்டது. பூங்காவின் கால்நடை பராமரிப்பு துறை வழிகாட்டுதல்படி, எட்டு குரங்குகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த செயல்முறைகள் முடிந்த பின், பொதுமக்கள் பார்வைக்காக விடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us