sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சிவன் பாதத்தை ராவணன் வணங்கிய இடம்

/

சிவன் பாதத்தை ராவணன் வணங்கிய இடம்

சிவன் பாதத்தை ராவணன் வணங்கிய இடம்

சிவன் பாதத்தை ராவணன் வணங்கிய இடம்


ADDED : நவ 18, 2025 04:46 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டியாவின் கே.எம். தொட்டி அருகே அனுமந்த நகர் கிராமத்தில் அமைந்துள்ளது ஆத்ம லிங்கேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் மலை மீது அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கும், ராமாயண காலத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளது. இலங்கையின் அரசன் ராவணன் தீவிர சிவபக்தராக இருந்தார். தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்ற, சிவனின் காலில் விழுந்து ராவணன் ஆசி பெற்றார். பின், அதே இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார். அந்த இடத்தில் நாளடைவில் கோவில் கட்டப்பட்டது.

ராவணன் லிங்கத்தை வைத்து வழிபட்ட இடம் என்பதால், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். சிவராத்திரி, பிரதோஷம் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கோவில் மலை மீது இருப் பதால் படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். செல்லும் வழியிலேயே ஆஞ்சநேயர், பசவண்ணர் சிலைகள் உள்ளன.

சிவலிங்கத்தை தரிசித்த பின், கோவில் வளாகத்தில் உள்ள சிறிய குளத்தின் நடுப்பகுதியில் மலையை கையில் துாக்கி செல்லும் ஹனுமன் சிலை உள்ளது. இச்சிலை பக்தர்களை வெகுவாக கவர்கிறது. கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய தோட்டங்களும் உள்ளன. குடும்பத்தினருடன் செல்வோர் சாமி தரிசனம் முடிந்ததும், தோட்ட பகுதியில் அமர்ந்து நேரத்தை செலவழிக்கலாம். கோவில் அருகில் மைதானமும் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

பெங்களூரில் இருந்து கோவில் 85 கி.மீ., தூரத்தில் அமைந்து உள்ளது. சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து கே.எம்.தொட்டி கிராமத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்வோர் ஹனகேரே ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம். கோவிலின் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்து இருக்கும்

- - நமது நிருபர் -- .






      Dinamalar
      Follow us