தங்கவயலில் விளையாட்டு வளர்ச்சி: காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா உறுதி
தங்கவயலில் விளையாட்டு வளர்ச்சி: காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா உறுதி
ADDED : ஜூன் 10, 2026 10:50 PM

தங்கவயல்: ' 'தங்கவயலில் விளையாட்டு வளர்ச்சிக்கும், விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் தேவையான உதவிகளை செய்வேன்,'' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா உறுதி அளித்தார்.
மத்திய அரசின் 'கேலோ இந்தியா' அமைப்பின் சார்பில் சீரழிந்து கிடந்த, தங்கவயல் ஜிம்கானா மைதானம் சீரமைக்கப்பட்டு உள்ளது.
இப்பணிகளின் பொறுப்பை ஏற்றிருந்த 'கேலோ' அமைப்பின் உறுப்பினர் பிரதீப் நாயுடு, தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா, மைதானத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்ற அவர், நேற்று அங்கு சென்று, சீரமைப்பு பணிகளை பார்த்தார்.
'தங்கவயலில் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஒரு விளையாட்டு அகாடமி அமைக்க வேண்டும். இம்மாதம், 27, 28 தேதிகளில் ஜிம்கானா மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றும் அங்கிருந்தவர்கள் கோரினார்.
இதற்கு பதிலளித்து ரூபகலா கூறுகையில், ''தங்கவயலில் விளையாட்டு ஆர்வலர்கள், திறமையான வீரர் - வீராங்கனையர் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்க என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். உள்ளூர் விளையாட்டு வீரர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அவர்கள் கருத்துகள், பரிந்துரைகளை பெற வேண்டும்,'' என்றார்.
