/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
24 மணி நேரமும் திறந்தே இருக்கும் ஸ்ரீ பெட்டாடா ரங்கநாத சுவாமி கோவில்
/
24 மணி நேரமும் திறந்தே இருக்கும் ஸ்ரீ பெட்டாடா ரங்கநாத சுவாமி கோவில்
24 மணி நேரமும் திறந்தே இருக்கும் ஸ்ரீ பெட்டாடா ரங்கநாத சுவாமி கோவில்
24 மணி நேரமும் திறந்தே இருக்கும் ஸ்ரீ பெட்டாடா ரங்கநாத சுவாமி கோவில்
ADDED : ஜூன் 23, 2025 11:12 PM

துமகூரு, குனிகல், மீனசினஹள்ளியில் உள்ள மலை மீது அமைந்துள்ளது ஸ்ரீ பெட்டாடா ரங்கநாத சுவாமி கோவில். இந்த கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் 200 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டியிருக்கும். படிக்கட்டுகள் ஏறும் போது ஓய்வு எடுக்க, ஆங்காங்கே உட்காருவதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
வெயிலிலிருந்து தப்பிக்க காலை, மாலை நேரங்களில் கோவிலுக்கு வருவது சிறப்பு. அதே போல, மாலை நேரங்களில் சூரிய அஸ்தமனத்தையும் பார்க்க முடியும்.
திருவிழா
இந்த மலையின் மீது உள்ள மரத்துக்கு அடியில் ரங்கநாதசுவாமி ஓய்வு எடுத்து இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு கதவுகள் கிடையாது. 24 மணி நேரமும் கோவில் நடை திறந்தே தான் இருக்கும். ஆனால், இரவு நேரங்களில் மலை மீது ஏற வனத்துறை அனுமதி வழங்குவதில்லை. கோவிலில் மூலவராக ரங்கநாதசுவாமி உள்ளார்.
அதே மலை மீது ஆஞ்சநேயசுவாமி கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் ரத உத்சவ திருவிழா, 15 நாட்கள் நடக்கும். அப்போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர்.
குடும்ப வழிபாடு
இங்கு வரும் பக்தர்கள் ரங்கநாதருக்கு மலர் மாலைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர். ரங்கநாதரின் திருஉருவ சிலையில் நாகம் ஒன்றும் உள்ளது. அதேபோல, மூலவருக்கு முன், சிறிய நாகினி சிலை உள்ளது. அங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் வழக்கம்.
இங்கு வருவோர், ஆன்மிகத்தை தாண்டி, இயற்கையுடன் பேசும் பாக்கியம் பெறுவர். மலையின் மீது இருந்து கொண்டு, நகரத்தின் அழகை பார்க்கும் வாய்ப்பும் உள்ளது. குடும்பத்துடன் வந்து வழிபட உகந்த கோவிலாக இருக்கும். இங்கு சில பக்தர்கள் வாரந்தோறும் வருகை தருவர்.
- நமது நிருபர் -