தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி தற்கொலை

 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி தற்கொலை

 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி தற்கொலை


ADDED : ஏப் 11, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: இரண்டாம் ஆண்டு பி.யு.சி.,யில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஹூப்பள்ளி மாவட்டம் உனகல்லின் சித்த கல்யாணா நகரில் வசித்தவர் ஷிராவணி மாருதி காளே, 18. இவர், ஹூப்பள்ளியின் வித்யாநகரில் கனகதாசர் கல்லுாரியில் வர்த்தக பிரிவில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்தார். படிப்பில் சூட்டிகையான இவர், இறுதி தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெறுவேன் என, நம்பினார்.

தன் தோழிகளிடமும் சவால் விட்டிருந்தார். மூன்று நாட்களுக்கு முன், தேர்வு முடிவு வெளியான போது, 77 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தார். இது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தும், அது ஷிராவணிக்கு திருப்தி அளிக்கவில்லை. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற மன அழுத்தத்தால், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹூப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us