தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அறிவியல் கழக விடுதியில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை 

 அறிவியல் கழக விடுதியில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை 

 அறிவியல் கழக விடுதியில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை 


ADDED : ஆக 08, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சதாசிவநகர்: பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக விடுதியில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கபல்லாபூரை சேர்ந்தவர் ரக் ஷன், 20. பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை சக மாணவர்கள் நடைபயிற்சிக்கு சென்றனர். அறையில் தனியாக இருந்த ரக் ஷன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரக் ஷன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், 'நான் செய்வது தவறு என எனக்கு தெரியும். ஆனால் என்னால் முடிவை மாற்ற முடியவில்லை. உண்மையை சொல்ல போனால் நான் பயனற்றவன். அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள்' என, எழுதப்பட்டு இருந்தது.

ரக் ஷன் தற்கொலைக்கான காரணம் குறித்து, சதாசிவநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us