ADDED : ஏப் 08, 2026 04:37 AM

அ நிறம் | அளவு
எலஹங்கா: விடுதி கட்டடத்தின், 7வது மாடியில் இருந்து குதித்து, மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் லட்சுமா மிஸ்ரா, 21. பெங்களூரு எலஹங்கா நியூ டவுன் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்தார். கல்லுாரிக்கு சொந்தமான விடுதியில் நண்பர்கள் சிலருடன் தங்கி இருந்தார்.
நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கட்டடத்தின் 7வது மாடிக்கு சென்ற லட்சுமா மிஸ்ரா கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
லட்சுமா மிஸ்ராவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவருடன் தங்கியிருக்கும் மாணவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
