/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
4 வது மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி
/
4 வது மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி
ADDED : ஜன 20, 2026 06:23 AM
தார்வாட்: ஹூப்பள்ளியில் தனியார் கல்லுாரி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து விழுந்த மாணவி மரணமடைந்தார்.
கொப்பால் மாவட்டம் காவலுாரை சேர்ந்தவர் சுங்கா, 17. தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளியின் பைரிதேரகொப்பாலில் உள்ள சனா கல்லுாரியில் படித்து வந்தார்.
இக்கல்லுாரி விடுதியில் தங்கி படித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு விடுதியின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதைப்பார்த்த மற்ற மாணவியர், உடனடியாக வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
மாணவியை கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சனாவின் பெற்றோர், 'கல்லுாரி நிர்வாகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காததும், அலட்சியமுமே, தங்கள் மகளின் மரணத்துக்கு காரணம்' என்று ஹூப்பள்ளி ஏ.பி.எம்.சி., நவநகர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.

