sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறு சிறு பணிகளை மாணவர்கள் செய்யலாம்: செலுவராய சாமி

 சிறு சிறு பணிகளை மாணவர்கள் செய்யலாம்: செலுவராய சாமி

 சிறு சிறு பணிகளை மாணவர்கள் செய்யலாம்: செலுவராய சாமி


ADDED : பிப் 16, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாண்டியா: ''பள்ளி வளாகத்தில் செடிகள் நடுவது, துப்புரவு செய்வது போன்ற சிறு சிறு வேலைகளை, மாணவர்கள் செய்வது தவறு இல்லை,'' என விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.

மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நாகமங்களாவின், நல்குந்தி கிராமத்தின், அரசு தொடக்க பள்ளி சிறார்களை, கட்டட பணிக்கு பயன்படுத்தியது குறித்து, தகவல் கேட்டறிந்தேன். மாணவர்களை பள்ளி வளாகத்தில் செடிகள் நடுவது, துப்புரவு செய்வது போன்ற சிறு சிறு பணிகளை செய்ய வைப்பது குற்றம் அல்ல. ஆனால் மற்றவரின் நிலத்துக்கு அழைத்து சென்று, கடுமையான வேலைகளை செய்ய வைப்பது தவறாகும். பள்ளி சிறார்கள் கையில் கடப்பாரை, மண் வெட்டி கொடுத்து வேலை செய்ய வைத்தது தெரிந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இதை பற்றி மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ., விடம், அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கடினமான பணிகளுக்கு சிறார்களை பயன்படுத்துவது, சட்டப்படி குற்றம். கட்டட பணிகளுக்கு மாநில அரசு போதுமான நிதி வழங்குகிறது. இதை பயன்படுத்தி, கூலியாட்களை வைத்து, வேலை செய்து கொள்ளலாம். மாணவர்களை இத்தகைய பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என, அரசு தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us