sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெங்., பல்கலை வழியாக செல்லும் வாகனங்களால் மாணவர்கள் அவதி

/

பெங்., பல்கலை வழியாக செல்லும் வாகனங்களால் மாணவர்கள் அவதி

பெங்., பல்கலை வழியாக செல்லும் வாகனங்களால் மாணவர்கள் அவதி

பெங்., பல்கலை வழியாக செல்லும் வாகனங்களால் மாணவர்கள் அவதி


ADDED : மார் 22, 2025 06:41 AM

Google News

ADDED : மார் 22, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகம் வழியாக செல்லும் வாகனங்களால், கல்வி கற்பதில் தங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக மாணவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

தடை


பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில், ஞானபாரதி மெட்ரோ ரயில் நிலையத்தின் வலது பக்கமாக திரும்பும் இடத்தில் இருந்து, பெங்களூரு பல்கலைக்கழக வளாகம் ஆரம்பமாகிறது.

கிட்டத்தட்ட 1 கி.மீ., துாரம் பயணித்து சென்றால், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளின் கட்டடங்கள், மாணவர்கள் வகுப்பறை, தங்கும் விடுதி அமைந்து உள்ளன.

பல்கலைக்கழக வளாக சாலை வழியாக சென்றால், உல்லால் உபநகரா, நாகரபாவிக்கு செல்ல முடியும். நாகரபாவி மெயின் ரோட்டில் நேராக பயணம் செய்தால், மாகடி சாலையை அடைந்து விடலாம்.

இதனால் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு பி.எம்.டி.சி., பஸ்சில் இருந்து தவறி விழுந்து, கோலாரை சேர்ந்த ஷில்பா என்ற மாணவி இறந்தார்.

தனியார் வாகனங்கள் பல்கலைக்கழக வளாகம் வழியாக செல்வதால், விபத்துகள் அடிக்கடி நடப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினார். போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் மற்ற வாகனங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

கோரிக்கை


பல்கலைக்கழக வளாகத்தில் நிலவும் போக்குவரத்து பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியும் கடந்த ஜனவரியில் கடிதம் எழுதி இருந்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தினமும் காலை 8:00 மணி முதல் காலை 11:30 மணி வரை; மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை இந்த சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன.

வாகனங்கள் அடிக்கும் ஹாரன்களால், கல்வி கற்பதில் தங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.

வேகமாக வரும் வாகனங்கள் சில நேரங்களில் மாணவர்கள் மீது மோதி விடுகின்றன.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சரியான நேரத்திற்கு, எங்களால் வகுப்பிற்கு செல்ல முடியவில்லை என்று, மாணவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து உள்ளது.






      Dinamalar
      Follow us