தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சுப்பிரமணியன் பட்ஜெட் 5

சுப்பிரமணியன் பட்ஜெட் 5

சுப்பிரமணியன் பட்ஜெட் 5


ADDED : மார் 07, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உள்கட்டமைப்பு

 நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. பெங்களூரில், 2வது விமான நிலையம் உருவாக்கப்படும். இதற்காக இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தொழில்நுட்ப ஆலோசனை பெறப்படும்

 மாநிலத்தில் உள்ள ஏழு உள்நாட்டு விமான நிலையங்கள் மேம்பாட்டிற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

 விஜயபுரா, ஷிவமொக்கா விமான நிலைய வளாகத்தில், பொது - தனியார் கூட்டமைப்பில் விமான பயிற்சி பள்ளி உருவாக்கப்படும்

 ஜினிகெரா -- ராய்ச்சூர்; துமகூரு -- ராயதுர்கா; பேலுார் - சிக்கமகளூரு; குடச்சி -- பாகல்கோட்; -வாடி - கதக்; துமகூரு -- தாவணகெரே; பேலுார் - ஹாசன்; ஷிவமொக்கா -- ஷிகாரிபுரா -- ராணிபென்னுார்; தார்வாட் -- கித்துார் -- பெலகாவி ஆகிய புதிய ஒன்பது ரயில் பாதை பணிகள், மத்திய, மாநில அரசுகளின், 50:50 சதவீத பங்களிப்பில் மேற்கொள்ளப்படும்.

இந்த பணிகளுக்கு 2,950 கோடி ரூபாயும், நிலம் கையகப்படுத்த 2,682 கோடி ரூபாயும் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் கர்நாடக அரசு, 600 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது

 பெங்களூரு ரூரல் ரயில் திட்ட பணிகள் காரிடார் - 2வில், பென்னிகானஹள்ளி -- சிக்கபானவாரா இடையே பணிகள் நடக்கின்றன. ஹீலலிகே -- ராஜனகுண்டே ரயில் பாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இரண்டு ரயில் பாதை பணிகளையும், 2030 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பணிகளுக்காக இந்த நிதியாண்டில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது

 பையப்பனஹள்ளி -- ஓசூர்; யஷ்வந்த்பூர் -- சன்னசந்திரா இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் 812 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. கர்நாடக அரசு 406 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த நிதி ஆண்டில் மேலும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us