sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பீதரின் 2 கிராமங்களில் திடீர் நில நடுக்கத்தால் பீதி

/

 பீதரின் 2 கிராமங்களில் திடீர் நில நடுக்கத்தால் பீதி

 பீதரின் 2 கிராமங்களில் திடீர் நில நடுக்கத்தால் பீதி

 பீதரின் 2 கிராமங்களில் திடீர் நில நடுக்கத்தால் பீதி


ADDED : ஜன 29, 2026 06:41 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீதர்: ஹுசுகனஹள்ளி மற்றும் சீரகட்டஹள்ளி கிராமங்களில், நில நடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

பீதர் மாவட்டத்தின், ஹுசுகனஹள்ளி மற்றும் சீரகட்டஹள்ளி கிராமங்களில், நேற்று மதியம் 1:34 மணிக்கு, திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் இருந்து பெரும் சத்தம் வந்தது. வீடுகளில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்து, வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

வீட்டுக்குள் செல்ல பயந்து, திறந்த வெளியில் அமர்ந்தனர். இவ்விரு கிராமங்களிலும் நில நடுக்கத்தின் தீவிரம் 1.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

பீதரின், ரஞ்சோலகேனி அருகில் உள்ள, ஹுசுகனஹள்ளி கிராமத்தின், 1 கி.மீ., தொலைவில், வடமேற்கு திசையில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, பேரிடர் கண்காணிப்பு மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நில நடுக்கம் ஏற்பட்ட கிராமங்களை, சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us