/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் தற்கொலை
/
எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் தற்கொலை
ADDED : ஏப் 24, 2026 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைத்தும், 'டிஸ்டிங்ஷன்' வரவில்லை என, மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவின், குரஹட்டி கிராமத்தில் வசித்தவர் த்ரிஷீலா, 16. இவர் எஸ்.எஸ்.எல்.சி., படித்தார். நன்றாக தேர்வும் எழுதியிருந்தார்.
டிஸ்டிங்ஷன் வரும் என, எதிர்பார்த்தார். தோழிகளிடமும் கூறியிருந்தார். தேர்வு முடிவு நேற்று வெளியானது. அவர் 625 க்கு 440 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், மனம் நொந்த த்ரிஷீலா, வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நஞ்சன்கூடு போலீசார் விசாரிக்கின்றனர்.

