/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
வயசு வெறும் நம்பர் தான் நிரூபிக்கிறார் சுலதா காமத்
/
வயசு வெறும் நம்பர் தான் நிரூபிக்கிறார் சுலதா காமத்
வயசு வெறும் நம்பர் தான் நிரூபிக்கிறார் சுலதா காமத்
வயசு வெறும் நம்பர் தான் நிரூபிக்கிறார் சுலதா காமத்
ADDED : டிச 29, 2025 06:37 AM

தட்சிண கன்னடாவின் மங்களூரை சேர்ந்தவர் சுலதா காமத், 72. இவருக்கு வயதாகி விட்டது என யாரும் கூற முடியாது. அந்த அளவிற்கு இவரின் செயல்பாடுகள் உள்ளன. இந்த வயதிலும் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். ஒவ்வொரு மாதமும், மூன்று அல்லது நான்கு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கிறார். இதன் காரணமாக, இவருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
கடற்கரை சாலையில் தினமும், 'வாக்கிங்' செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவரை, அவரது உறவினர்கள் வீட்டிலே இருக்கும்படி அறிவுறுத்தினர். அதை காதில் வாங்காத சுலதா, தன் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார்.
அதே சமயம், இந்த வயதில் எப்படி இவ்வளவு கடும் பயிற்சியில் ஈடுபடுகிறார் என, பலரும் ஆச்சரியப்படுகின்றனர். இன்றைக்கும் பல போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்து வருகிறார்.
இதுகுறித்து, சுலதா காமத் கூறியதாவது:
என் கல்லுாரி நாட்களில், விளையாட்டு போட்டிகளில் நான் பெரிதாக ஈடுபடவில்லை. இருப்பினும், திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்த பின், விளையாட்டின் மீது எனக்கு ஆர்வம் வந்தது. 2006ம் ஆண்டு பயிற்சி எதுவும் இல்லாமல், ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்றேன். அதுவே, நான் பங்கேற்ற முதல் போட்டி. இப்படியே, 15 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டப்பந்தயம் மற்றும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
எனக்கு கை, கால் வலி எதுவும் இல்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துள்ளேன். என்னை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர். தற்போதும், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கிறேன். நான் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும், எனக்கு மிகுந்த மரியாதை தரப்படுகிறது. சிறப்பு போட்டியாளராக அறிவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இளம் வயதினர் மொபைல் போனில் மூழ்கி இருக்காமல் வீட்டை விட்டு வெளியே வந்து ஓடி, ஆடி விளையாட வேண்டும். உடலுக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். அப்போது தான் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வயது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபிக்கும் சுலதா காமத்தின் வாழ்க்கை, மொபைல் போன்களில் மூழ்கியிருப்போருக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
- நமது நிருபர் -:.

