தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு அரண்மனை வளாகத்தில் 'கோடை உத்சவம்' மலர் கண்காட்சி

 மைசூரு அரண்மனை வளாகத்தில் 'கோடை உத்சவம்' மலர் கண்காட்சி

 மைசூரு அரண்மனை வளாகத்தில் 'கோடை உத்சவம்' மலர் கண்காட்சி


ADDED : டிச 19, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு அரண்மனை வாரியம் மற்றும் வாரியத்துக்கு உட்பட்ட தோட்டக்கலை பிரிவு இணைந்து 'கோடை உத்சவம்' என்ற பெயரில் மலர் கண்காட்சி நடத்துகிறது. வரும் 21ம் தேதி சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா துவக்கி வைத்தார். அன்று முதல் 11 நாட்கள் உத்சவம் நடக்கிறது.

சிருங்கேரி பார்வையாளர்களை கவரும் வகையில் 50 அடி அகலத்தில், 16 அடி நீளத்தில், 25 அடி உயரத்தில் சிருங்கேரி சாரதாம்பா கோவில் மாதிரி பூக்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சாமந்தி, சால்வியா, டேலியா, பெட்டூனியா, கிரிஸான்தமம், கோலியஸ், பிரெஞ்சு சாமந்தி, ஜின்னியா உட்பட 35க்கும் மேற்பட்ட வகையான மலர்களில், 25 ஆயிரம் பூச்செடிகள் வைக்கப்படுகிறது.

இது தவிர, சமூக கருபொருள் மற்றும் சமகால சாதனைபுரிந்த மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா நினைவாக, சிறுதானியங்கள் மூலம் அவரின் உருவம் வைக்கப்பட உள்ளது. மும்முடி கிருஷ்ணராஜ உடையார், இந்திய அரசியலமைப்பின் முகவுரை, காய்கறி சிற்பங்கள் மற்றும் ராதா - கிருஷ்ணர் ஊஞ்சலில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற உள்ளன.

ஆப்பரேஷன் சிந்துார் பய ங்கரவாத நடவடிக்கைகளை அழிக்க, இந்திய ராணுவம் நடத்திய ஆப்பரேஷன் சிந்துாரை போற்றும் வகையில் போர் பீரங்கி வாகனம், போர்க்கப்பல், போர் ஜெட் விமானம் ஆகியவையும் மலர்களால் வடிவமைக்கப்படுகின்றன.

உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கோ - கோ, கபடி, பார்வையற்றோர் கிரிக்கெட் வீரர்களின் வெற்றி காட்சிகளும் இடம் பெறுகின்றன. குழந்தைகளை கவரும் வகையில் சோட்டா பீம், காளிங்க நாகத்தின் மீது கிருஷ்ணர் நடனமாடும் காட்சி, தேசிய பறவை மயில், தட்டான்பூச்சி, அன்னப்பறவை, நாரை, சைக்கிள், அணில், கேரட்டை பிடித்திருக்கும் முயல், கரடி, மாம்பழம் என பல கற்பனை கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன.

மலர் கண்காட்சியை காண வரும், முதல் 50 பேருக்கு, தினமும் கற்றாழை, துளசி, மல்லிகை, வெற்றிலை என 50 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். நாள் முழுதும் அமைதியான மற்றும் கலாசார சூழலை உருவாக்கும் வகையில், ஜெயசாமராஜ உடையாரின் பக்தி பாடல்கள் இசைக்கப்படும். 'அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் பிரத்யேக புகைப்பட மற்றும் காணொளி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தசரா திருவிழாவின் பரிணாம வளர்ச்சியை, பார்வையாளர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உடையார் வம்சத்தின் அரிதான புகைப்படங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்படும்.

பொம்மை கண்காட்சி இந்திய பண்டிகை காலத்தை நினைவூட்டும் விதமாக, ஐந்து கருப்பொருட்கள் மூலம் பொம்மை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கலைஞர்கள் கீதா ஸ்ரீஹரி, 'ஹர ஹர மஹாதேவ்'; மீனாட்சி சைலகுமார், 'சம்பூர்ண ராமாயணம்'; ஹேமலதா குமாரசாமி, 'சிவ கேசவமூர்த்தி'; அன்னபூர்ணா கோபாலகிருஷ்ணா, 'தேவனொப்பா - நாம ஹலவு'; சர்வமங்கலா கிருஷ்ணாபட்டின் 'திருப்பதி சீனிவாச வைபவம்' இடம் பெறுகிறது.

வரு ம் 21ம் முதல் 31ம் தேதி வரை தினமும் இரவு 7:00 முதல் 9:00 மணி வரை அரண்மனை, மின்னொளியில் ஜொலிக்க உள்ளது. அதேவேளையில், 21 முதல் 25 ம் தேதி வரை தினமும் மாலை 5:00 முதல் 9:30 மணி வரை அரண்மனை வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், கர்நாடக போலீஸ் பேண்ட் குழுவினர், 31ம் தேதி இரவு 11:00 மணி முதல் கர்நாடகா மற்றும் ஆங்கில பேண்ட் இசை வாசிக்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us