/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கு 4 பேருக்கு சம்மன்
/
தர்மஸ்தலா வழக்கு 4 பேருக்கு சம்மன்
ADDED : அக் 25, 2025 11:04 PM
பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, மகேஷ் திம்மரோடி உள்ளிட்ட 4 பேருக்கு, எஸ்.ஐ.டி., சம்மன் அனுப்பி உள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, தர்மஸ்தலாவின் உஜ்ரே கிராமத்தை சேர்ந்த ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா ஆகியோருக்கு, விசாரணை அதிகாரி ஜிதேந்திர குமார் தயமா நேற்று சம்மன் அனுப்பினார்.
அந்த சம்மனில், '26ம் தேதி விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள்' என, கூறப்பட்டுள்ளது.

