தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சூரஜ் ஹெக்டே உடல் தகனம் ராகுல் இறுதி அஞ்சலி 

 சூரஜ் ஹெக்டே உடல் தகனம் ராகுல் இறுதி அஞ்சலி 

 சூரஜ் ஹெக்டே உடல் தகனம் ராகுல் இறுதி அஞ்சலி 


ADDED : ஜூன் 10, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 03:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மாரடைப்பால் மரணம் அடைந்த, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சூரஜ் ஹெக்டே உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அகில இந்திய காங்கிரஸ் செயலர், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர், கர்நாடக வாக்குறுதி திட்ட செயலாக்க குழு துணை தலைவராக பணியாற்றிய சூரஜ் ஹெக்டே, 55, கடந்த 7ம் தேதி நள்ளிரவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை பெங்களூரு வந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலும், சூரஜ் ஹெக்டே வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கரூர் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும், உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின், சூரஜ் ஹெக்டே உடல் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவர் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடியை அவரது மனைவி ஷில்பாவிடம், முதல்வர் சிவகுமார் ஒப்படைத்து ஆறுதல் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us