/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரயில்வே கிராசிங்கில் கண்காணிப்பு கேமரா சோதனை முறை வெற்றி
/
ரயில்வே கிராசிங்கில் கண்காணிப்பு கேமரா சோதனை முறை வெற்றி
ரயில்வே கிராசிங்கில் கண்காணிப்பு கேமரா சோதனை முறை வெற்றி
ரயில்வே கிராசிங்கில் கண்காணிப்பு கேமரா சோதனை முறை வெற்றி
ADDED : ஜூலை 20, 2025 09:47 PM

ஹூப்பள்ளி : ரயில்வே கிராசிங்கில், கேட் மூடப்படுகிறதா என்பதை ஸ்டேஷனில் இருந்தபடியே ஸ்டேஷன் மாஸ்டர்கள் கண்காணிக்கும் சோதனை ஹூப்பள்ளியில் வெற்றி பெற்றது. இதை நாடு முழுதும் விரிவுபடுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
ரயில்வே கிராசிங்கை வாகனங்கள் கடக்கும் போது, ரயில்கள் மோதும் பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் தமிழகத்தின் கடலுார் அருகே ரயில்வே கேட்டை பள்ளி வாகனம் கடக்கும் போது, ரயில் மோதியதில், மூன்று மாணவ - மாணவியர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஜூலை 18ல் தென்மேற்கு ரயில்வே ஹூப்பள்ளி பிரிவு சார்பில் ஹூப்பள்ளியில் உள்ள ஹொஸ்பேட் பகுதியில் நான்கு ரயில்வே கிராசிங்கில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
இது குறித்து, பொது மேலாளர் சரண் மத்துார் கூறியதாவது:
ரயில்வே கிராசிங்கில் இருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு, அப்பகுதி ஸ்டேஷன் மாஸ்டர் போன் மூலம், ரயில் வருவதாக தகவல் தெரிவிப்பார். அதன்பின், ரயில்வே கேட் மூடப்படுவது வழக்கம்.
தற்போது ரயில்வே வாரியம் அறிவுரைப்படி, ஹுப்பள்ளி நகரின் நான்கு ரயில்வே கிராசிங்கில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இது மட்டுமின்றி சோலார் மூலம் இயங்கும் யு.பி.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே கிராசிங்கை, சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் எல்.இ.டி., திரையில் பார்க்க முடியும்.
ஒரு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சென்ற பின், அடுத்து வரும் ரயில்வே கிராசிங்கில் உள்ள ஊழியருக்கு, ஸ்டேஷன் மாஸ்டர் ரயில் வரும் தகவலை தெரிவிப்பார். அவரும் ரயில்வே கேட்டை மூட நடவடிக்கை எடுப்பார். இதை ஸ்டேஷன் மாஸ்டர் கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்வார்.
ஒரு வேளை ரயில்வே கேட் மூடப்படவில்லை என்றால், ரயில் லோகோ பைலட்டுக்கு போன் செய்து, கேட் மூடவில்லை என்று தகவல் கொடுப்பார். இதன் மூலம், விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும். இது பற்றி, ரயில்வே வாரியத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த திட்டம், நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே கிராசிங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்.