ADDED : செப் 12, 2026 11:46 PM

ஷிவமொக்கா: மெக்கான் அரசு மருத்துவனையை, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி நேற்று ஆய்வு செய்தார்.
ஷிவமொக்கா மாவட்டம் மெக்கான் அரசு மருத்துவமனைக்கு நேற்று, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சென்றார். அங்கு உள் நோயாளியாக இருந்த பெண்களிடம் பேசினார்.
அப்போது பெண்கள், 'மருந்துகளை வெளியே வாங்கி வரும்படி டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்' என்றனர். வார்டு ஜன்னல்கள் சரியாக செயல்படாததால், நோயாளிகள் குளிரால் அவதிப்படுவதை கவனித்த நாகலட்சுமி, அதனை சரி செய்ய உத்தரவிட்டார்.
மருத்துவமனையை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:
மெக்கான் மருத்துவமனையின் மகளிர் பிரிவுக்கு சென்றேன். அங்கு சிலர், டாக்டர்கள் நன்றாக பார்த்து கொள்வதாகவும், சிலர் பார்ப்பதில்லை என்றும் கூறினர். ஏ.பி.எல்., கார்டு வைத்துள்ளவர்கள், தங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்று கூறினர். அவர்களுக்கு உதவும்படி பரிந்துரைத்து உள்ளேன்.
மருந்துகள் வெளியே வாங்கி வர பரிந்துரைக்கக் கூடா து. அவ்வாறு நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், மகளிர் காவல் நிலையத்துக்கு சென்ற அவர், அங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட விபரம், விசாரணை குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தவர்களின் மொபைல் எண்ணுக்கு போன் செய்த அவர், போலீஸ் நிலையத்தில் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து கேட்டறிந்தார்.
