/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., கழிவுநீர் மேலாண்மைக்கு சுவிட்சர்லாந்து தொழில்நுட்பம்
/
பெங்., கழிவுநீர் மேலாண்மைக்கு சுவிட்சர்லாந்து தொழில்நுட்பம்
பெங்., கழிவுநீர் மேலாண்மைக்கு சுவிட்சர்லாந்து தொழில்நுட்பம்
பெங்., கழிவுநீர் மேலாண்மைக்கு சுவிட்சர்லாந்து தொழில்நுட்பம்
ADDED : டிச 16, 2025 05:20 AM

பெங்களூரு: பெங்களூரு கழிவுநீர் மேலாண்மைக்கு சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தை ஏற்று கொள்வதற்காக களம் அமைக்கப்பட்டு வருவதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் கூறினார்.
பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய தலைவரான தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர், 'ஸ்விஸ்னெக்ஸ்' இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான ஏஞ்சலா ஹோனெக்கர் உடன் காணொளி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு கழிவுநீர் மேலாண்மை சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
பின், அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், சர்வதேச நிபுணத்துவத்துடன் குறிப்பிட்ட மேம்பாட்டிற்கு தயாராகி வருகிறது. அதிநவீன கழிவுநீர் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் புகழ் பெற்று உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நமது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
கழிவுநீர் வாரியத்தின் உள்கட்டமைப்பில் தங்கள் தீர்வுகளை சோதனை அடிப்படையில் செயல்படுத்த ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக, எங்களது கதவு திறந்தே உள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் புதுமைகளை ஏற்று கொள்ள துணை முதல்வர் சிவகுமாரின் தொலைநோக்கு பார்வையின் கீழ் உறுதியாக உள்ளது.
கழிவுநீர் மேலாண்மை அமைப்புகளுக்கு சுவிட்சர்லாந்து உலகளவில் புகழ்பெற்றது. சுவிஸ் பல்கலைக்கழகமும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் நமது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தொழில்நுட்ப முதலீடு செய்ய முன்வருவது வரவேற்கத்தக்கது. இதற்கான களம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஒத்துழைப்பு சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரத்தை உறுதி செய்வது மட்டுமின்றி, எங்கள் வாரிய இன்ஜினியர்களுக்கு உலக தரத்திலான தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
நாங்கள் செயல்படுத்தும் நிலையான நீர் மேலாண்மை திட்டங்களுக்கு, ஸ்விஸ்னெக்ஸ் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். வரும் நாட்களில் கருத்தரங்கு, ஆலோசனை நடத்தவும் ஒப்பு கொண்டு இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

