ஹாசனாம்பா கோவிலில் தாசில்தார், டி.எஸ்.பி., வாக்குவாதம்
ஹாசனாம்பா கோவிலில் தாசில்தார், டி.எஸ்.பி., வாக்குவாதம்
UPDATED : நவ 09, 2026 12:00 AM
ADDED : நவ 08, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
ஹாசன்: ஹாசன் மாவட்டம், ஹாசனாம்பா கோவிலில் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. நேற்று தீபாவளி மற்றும் ஞாயிற்று கிழமை என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
தர்ம தரிசனம், 300 ரூபாய், 1,000 ரூபாய் கவுன்டர்களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இந்நிலையில், கோவில் முன்பு வி.ஐ.பி., மற்றும் இதர முக்கிய பிரமுகர்களுக்கான, ‘புரோடோகால்’ வாகனம் சென்றது. அப்போது தாசில்தார் கீதா, ‘என் வாகனத்தையும் அனுமதியுங்கள்’ என்று டி.எஸ்.பி., மாலதேஷிடம் கேட்டார்.
இவ்விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தாசில்தார் கீதா, கண்ணீர் சிந்தினார். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
