/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆக்கிரமிப்பு பற்றி அறிக்கை அளிக்காத தாசில்தாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
/
ஆக்கிரமிப்பு பற்றி அறிக்கை அளிக்காத தாசில்தாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ஆக்கிரமிப்பு பற்றி அறிக்கை அளிக்காத தாசில்தாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ஆக்கிரமிப்பு பற்றி அறிக்கை அளிக்காத தாசில்தாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : மே 09, 2025 11:33 PM

பெங்களூரு: கால்வாய் ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக லே - அவுட் அமைத்தது குறித்து, அறிக்கை அளிக்காத தாசில்தாருக்கு, நில அபகரிப்பு தடை சிறப்பு நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பெங்களூரு கிழக்கு தாலுகாவின், பிதரஹள்ளி பேரூராட்சியின், காடுகோடியின் சர்வே எண் 299 மற்றும் பெளத்துாரின் சர்வே எண் 11/4ஏ நிலத்தில், 9 சென்ட் கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக லே - அவுட் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, பெளத்துார் பரமேஷ், நில அபகரிப்பு தடை சிறப்பு நீதிமன்றத்தில், புகார் அளித்திருந்தார்.
புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், சட்டவிரோதமாக லே - அவுட் அமைத்ததாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து, ஆவணங்களுடன் அறிக்கை அளிக்கும்படி பெங்களூரு கிழக்கு தாலுகா தாசில்தார் ராஜிவுக்கு உத்தரவிட்டது.
உரிய அவகாசம் அளித்தும், அவர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கு தொடர்பாக, நேற்று விசாரணை நடந்தது. அப்போது ஆஜரான புகார்தாரரான பெளத்துார் பரமேஷ், 'சரியான ஆவணங்களுடன் அறிக்கை அளிக்கும்படி, தாசில்தாருக்கு நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டது.
'ஆனால் அவர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டதால், அரசு நிலத்தை மீட்க தாசில்தாருக்கு மனம் வரவில்லை' என, குற்றஞ்சாட்டினார்.
தாசில்தார் அறிக்கை அளிக்காததை கண்டித்த நீதிமன்றம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. ஜூன் 23க்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.