/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு நோட்டீஸ்
/
முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு நோட்டீஸ்
முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு நோட்டீஸ்
முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 18, 2025 09:35 AM

பெங்களூரு: சித்தராமையா தனது முதல்வர் பதவியை டிசம்பர் மாதம் சிவகுமாரிடம் ஒப்படைப்பார் என்று கூறிய, சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்காவுக்கு கட்சியின் ஒழுங்கு குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வெளிப்படையாக பேச கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டு இருந்தாலும், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் கேட்டபாடில்லை. 'முதல்வர் பதவிக்காக டில்லியில் ஒப்பந்தம் நடந்தது உண்மை தான்' என்று கூறியதால், ராம்நகர் எம்.எல்.ஏ., இக்பால் உசேனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா, கடந்த 15ம் தேதி அளித்த பேட்டியில், 'கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் நிச்சயம் நடக்கும். வரும் டிசம்பரில் சித்தராமையா தனது முதல்வர் பதவியை சிவகுமாரிடம் ஒப்படைப்பார்' என்று கூறி இருந்தார். கட்சியின் உத்தரவை மீறி பேசியதால், பசவராஜ் சிவகங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று, நேற்று முன்தினம் சிவகுமார் கூறி இருந்தார்.
இதன்படி, கட்சியின் ஒழுங்கு குழு, 'முதல்வர் பதவி பற்றி பேசியது தொடர்பாக, ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று, பசவராஜ் சிவகங்காவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.