UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 11:04 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழா, ஹலசூரு ஏரிக்கரையில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., - பி.யு., கல்லுாரியில், டிசம்பர் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது.
இப்புத்தக திருவிழாவின் விளக்க ஏடு அறிமுக விழா, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள பா.சு.மணி நுாலகத்தில் நேற்று நடந்தது.
தினச்சுடர், சஞ்சேவாணி நாளிதழ்களின் ஆசிரியர் பா.தே.அமுதன் ஏட்டை வெளியிட்டார்.
பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், சமூக சேவகர் ராஜகோபால பாலாஜி, புலவர் கார்த்தியாயினி, தன்னுரிமை மனமகிழ் மன்றம் ராஜசேகர், ஸ்ரீதரன், சங்கரதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
