/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியாக தமிழ் ஐ.ஏ.எஸ்., அன்புகுமார் நியமனம்

ADDED : ஜூலை 08, 2025 11:54 PM

பெங்களூரு: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியாக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்புகுமாரை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசின் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கர்நாடக அரசின் வீட்டுவசதி துறை செயலராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்புகுமாரை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியாக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இதனால் அவர் தற்போது வகித்து வந்த மாநில பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
அன்புகுமாரின் சொந்த ஊர், வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா சின்னப்பள்ளி குப்பம் கிராமம். எம்.ஏ., வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 2004ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ஜை சேர்ந்தவர். கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநர் உட்பட அரசின் பல துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.