/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முரசொலி' செல்வம் நினைவு நாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
/
'முரசொலி' செல்வம் நினைவு நாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
'முரசொலி' செல்வம் நினைவு நாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
'முரசொலி' செல்வம் நினைவு நாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ADDED : அக் 11, 2025 05:14 AM

பெங்களூரு: 'முரசொலி' செல்வத்தின் நினைவு நாள் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வி. இவரது கணவர் முரசொலி செல்வம். இவர், கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மரணம் அடைந்தார். இவரது முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டாலின் வந்தார்.
ஓசூர் தனுஷா ஏர்பேசில் காலை 10:45 மணிக்கு இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள, சகோதரி வீட்டிற்குச் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வம் உருவப்படத்திற்கு, மலர் துாவி ஸ்டாலின் வணங்கினார்.
கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி, அவை தலைவர் பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, பொ றுப்பு குழு முன்னாள் உறுப் பினர் தங்கவயல் ரத்னகுமார், ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன், ஓசூர் மேயர் சத்யா உட்பட பலரும், முரசொலி செல்வத்தின் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரம் சகோ தரி வீட்டில் இருந்த முதல்வர் ஸ்டாலின், கார் மூலம் மீண்டும் ஓசூர் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் மதியம் 2:45 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றார்.