தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாரம்பரிய உடை அணிந்து வந்த தமிழர்கள்

 பாரம்பரிய உடை அணிந்து வந்த தமிழர்கள்

 பாரம்பரிய உடை அணிந்து வந்த தமிழர்கள்


ADDED : ஜூலை 05, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 திருக்குறள் மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்க, 'தினமலர்' நாளிதழ் பேனர் கட்டப்பட்டிருந்தது. 'தினமலர்' ஸ்டாலும் இடம் பெற்றிருந்தது.

 மாநாட்டு நுழைவாயில் பகுதியில் போடப்பட்டு இருந்த திருவள்ளுவர் உருவ கோலம் அனைவரையும் கவர்ந்தது.

 சர்வக்ஞர், திருவள்ளுவர் உருவப்படங்களுக்கு மலர் துாவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.

 பெரும்பாலான ஆண்கள் பாரம்பரிய வேட்டி, சட்டையும், பெண்கள் சேலை, தாவணியும் அணிந்து வந்தனர்.

 சரளா ஆறுமுகம் எழுதிய பதினெண் கீழ்க்கணக்கு நூல் வெளியிடப்பட்டது.

 நாதஸ்வரம், டொல்லு குனிதா மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

 திருவள்ளுவர் சிலை வைத்திருந்தனர். அதற்கு பலரும் மலர் துாவி வணங்கினர். செல்பி எடுத்துக்கொண்டனர்.

 மாநாட்டில் பங்கேற்க வந்த அனை வருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

 திருக்குறள் தொடர்பான புத்தகங்கள், பரிசு பொருட்கள் விற்கப்பட்டன.

 திருக்குறள், தமிழில் மட்டுமின்றி உலகில் எழு த்து வடிவில் உள்ள மொழிகளான கன்னடம், ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்ச் போஜ்புரி, ஹிந்தி, மராத்தி, ஒரியா, அசாமி, சமஸ்கிருதம், சவுராஷ்டிரா, பிஜியன், அரபி, உருது, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, கொங்கினி, படுகா, அவாதி, போடா ஆகிய மொழிகளில் உள்ள திருக்குறள் நுால்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. இது போன்று பொது நுால் ஒன்று, பல மொழி களில் இருக்குமா என்ற வியப்பை ஏற்படுத்தியது.

 விழாவுக்கு வந்தவர்களுக்கு தண்ணீர், டீ, காபி வழங்கப்பட்டது.

 மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், அப்பளம், புலாவ், பாயசம் வழங்கப்பட்டது.

 பெங்களூரின் பல பகுதிகளில் இருந்தும் மாநாட்டிற்கு வந்தோரை அழைத்து வர, இலவச பி.எம்.டி.சி., பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

 ரமிதா, லக் ஷனா, ஸ்ருதியின் பரதநாட்டியமும், மிருளாளிணியின் திருக்குறள் பாடல் நடனமும் பார்வையாளர்களை கவர்ந்தது.

 சிலம்பு பயிற்சியாளர் ரொனால்டோ குழுவினரின் சிலம்பம், சுமன், லோகேஷ் தலைமையில் 12 பேரின் குங்பு அனைவரையும் கவர்ந்தது.

 ஸ்டால்களில் இடம் பெற்றிருந்த திருவள்ளுவர் சிலைகள், புத்தகங்கள், கீ செயின்களை பார்வையாளர்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us