தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சி.சி.பி., விசாரணைக்கு ஆஜராக தன்வீர் கவுடாவுக்கு உத்தரவு

சி.சி.பி., விசாரணைக்கு ஆஜராக தன்வீர் கவுடாவுக்கு உத்தரவு

சி.சி.பி., விசாரணைக்கு ஆஜராக தன்வீர் கவுடாவுக்கு உத்தரவு


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறை வீடியோவை கசிய விட்ட வழக்கில், சி.சி.பி., போலீசில், வரும், 30ல் ஆஜராக, நடிகர் தன்வீர் கவுடாவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், நடிகர் தர்ஷன், ரவுடி ஒருவருடன் அமர்ந்து புகைபிடித்தபடியும், டீ குடித்தபடியும் இருக்கும் வீடியோ பரவியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த, சி.சி.பி., போலீசார், நடிகர் தன்வீர் கவுடாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. விசாரணை நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தன்வீர் கவுடா மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி ஆனந்த் ராம்நாத் ஹெக்டே முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வக்கீல் அனுாப் குமார் வாதிடுகையில், ‘‘போலீஸ் விசாரணைக்கு தன்வீர் கவுடா ஒத்துழைப்பு தரவில்லை என்பதால், அவருக்கு ஏற்கனவே பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராக அவருக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘நவ., 30ம் தேதி காலை 11:00 மணிக்கு விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us