/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவியருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட ஆசிரியர்கள்
/
மாணவியருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட ஆசிரியர்கள்
மாணவியருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட ஆசிரியர்கள்
மாணவியருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட ஆசிரியர்கள்
ADDED : டிச 23, 2025 06:55 AM
யாத்கிர்: 'கல்வி சுற்றுலாவின் போது பள்ளி மாணவியரு டன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கல்வி துறையை பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
யாத்கிர் மாவட்டம் சுராபுராவின் கெம்பாவி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இப்பள்ளியின் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவியர் 93 பேர், மூன்று நாள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக, பள்ளி தலைமை ஆசிரியர் பாட்டீல், ஆசிரியர்கள் யமேஷ், குருராஜ் குல்கர்னி, கவுரவ ஆசிரியர் ஒருவர் என நான்கு பேர் உடன் சென்றனர்.
மாணவியர் சிலர், நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர்கள் நான்கு பேரும், 'ஷாட்ஸ்' மட்டும் அணிந்து கொண்டு, மாணவியருடன் விளையாடி உள்ளனர். இந்த புகைப்படத்தை, ஆசிரியர் ஒருவர் தனது வாட்ஸாப் ஸ்டேட்டசில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதை பார்த்த மாணவியரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியரின் பெற்றோர் பள்ளிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மாவட்ட டி.டி.பி.ஐ., எனும் பொதுகல்வி துணை இயக்குநர் அலுவலக அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்களுக்கு அதிகாரிகள் உறுதி அளித்த பின், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தலைமை ஆசிரியருக்கு டி.டி.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

