/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பீன்யா தொழிற்பேட்டைக்கு நீர் வழங்க டெண்டர்
/
பீன்யா தொழிற்பேட்டைக்கு நீர் வழங்க டெண்டர்
ADDED : ஜன 04, 2026 04:59 AM
பெங்களூரு: பீன்யா தொழிற்பேட்டைக்கு உயர்தர துாய்மையான சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
காவிரி நதி வீடுகளுக்கும், உயர்தர துாய்மையான சுத்திகரிக்கப்பட்ட நீர் தொழிற்சாலைகளுக்கும் வழங்குவதற்காக திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு உள்ளது. பீன்யா தொழிற்பேட்டைக்கு உயர்தர துாய்மையான சுத்திகரிக்கப்பட்ட நீர் தடையின்றி வழங்கப்படும். மலிவு விலையில் நீர் வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் லிட்டர் குடிநீர் சேமிக்கப்படும்.
இதற்காக, நாகசந்திராவில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

