தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோவில்கள் நிறைந்த தலக்காடு

 கோவில்கள் நிறைந்த தலக்காடு

 கோவில்கள் நிறைந்த தலக்காடு


ADDED : மார் 31, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

அரண்மனை நகரமான மைசூரில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் தலக்காடும் ஒன்று. இங்கு ஒரு காலத்தில், 30க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன. இன்று பெரும்பாலான கோவில்கள் மணலுக்குள் புதைந்து விட்டன.

இந்த நகரம் மணலுக்கு புதைந்ததற்கு பின்னால் ஒரு மர்மக்கதை இருக்கிறது. அது யாதெனில், 17ம் நுாற்றாண்டில் மைசூரு மன்னர் உடையார், விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்த திருமலை ராஜாவின் மனைவி அலமேலம்மாவிடம் இருந்த விலைமதிப்பற்ற நகைகளை கைப்பற்ற முயன்றார்.

அப்போது, வேறு வழியில்லாமல் அலமேலம்மா காவேரி நதியில் குதித்து உயிரிழந்தார். அந்த தருணத்தில் அவர், 'தலக்காடு மணலாகட்டும், மைசூரு மன்னர்களுக்கு வாரிசுகள் இல்லாமல் போக்கட்டும்' என சாபம் விடுத்தார்.

இதனாலே, தலக்காடு மணலால் மூடப்பட்டது என்று நம்பப்படுகிறது. இப்படி தலக்காடு பண்டைய கால வரலாறுகளில் தொடர்புடையது.

பஞ்சலிங்கங்கள் தற்போது, இங்குள்ள பஞ்சலிங்க கோவில்களை பற்றி பார்ப்போம். இங்குள்ள ஐந்து லிங்கங்களையும் தரிசித்தால் அனைத்து பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

முதலில் தலக்காட்டின் மையப்பகுதியில் உள்ள வைத்தியநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில், 14ம் நுாற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கோவில் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும். தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் இருக்கும்.

காவிரியில் குளியல் காவிரி நதி ஓரத்தில் அமைந்து உ ள்ளது பாதாளேஸ்வரர் கோவில். இக்கோவில், 10ம் நுாற்றாண் டில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள லிங்கம் நிறம் மாறும் தன்மையுடையது. இந்த கோவில் பாதி பகுதி மணலால் மூடப்பட்டு உள்ளது. இதனால், பள்ளத்தில் சென்று வழிபடுவது போன்ற எண்ணம் தோன்றும்.

தலக்காடி ன் காவேரி ஆற்றங்கரை பகுதியில் மருளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும்.

பல புராணங்களுடன் தொடர்புடைய அர்க்கேஸ்வரர் கோவில். 19ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை சூரிய நாராயண சுவாமி நேரில் வந்து வழிபட்டு சென்றதாக நம்பப்படுகிறது.

தலக்காடில் குன்றின் மீது அமைந்துள்ளது மல்லிகார்ஜுனா கோவில். இந்த கோவிலில் உள்ள, 20 அடி உயர தீபத்துாண் மிகவும் பிரபலமானது.

இந்த ஐந்து கோவில்களை தரிசித்து பயன் பெறலாம். மேலும், காவிரி நதியில் குளித்து மகி ழலாம். பரிசலில் பயண மும் செய்யலாம்.

சொந்த

வாகனத்தில்

செல்லலாம்

தலக்காடு மைசூரிலிருந்து, 45 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து, 133 கி.மீ தொலைவிலும் உள்ளது. மேலும், இங்கு நிறைய கோவில்களை பார்க்க வேண்டும் என்பதால் பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களை எடுத்து வருவதே சிறப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us