இறந்த பெண்ணின் கழுத்தில் மருத்துவமனையில் தாலி திருட்டு
இறந்த பெண்ணின் கழுத்தில் மருத்துவமனையில் தாலி திருட்டு
ADDED : ஆக 02, 2026 01:00 AM
மங்களூரு: மங்களூரு நகரில் வசிப்பவர் சுந்தர். இவரது மனைவி ஜானகி, 53, க்கு ஜூலை 26ம் தேதியன்று, காலை 8:00 மணியளவில் திடீரென இருதய வலி ஏற்பட்டது. சுந்தர் உடனடியாக ஆட்டோவில் மனைவியை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு இதய நோய்க்கு சிகிச்சை அளிக்க, டாக்டர்கள் இல்லாததால், அங்குள்ள டாக்டரின் சிபாரிசுபடி, மங்களூரின் அரசு சார்ந்த வென்லாக் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
அங்கு தீவர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஜானகி உயிரிழந்தார். சுந்தர் தன் மனைவியை, வென்லாக் மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது, இவரது கழுத்தில் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தாலி இருந்தது. அவர் இறந்த பின், அவரது கழுத்தில் தாலி இருக்கவில்லை. யாரோ திருடியுள்ளனர்.
தன் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்திய பின், மங் களூரு தெற்கு போலீஸ் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். இறந்த பெண்ணின் உடலில் இருந்து, தாலி திருடப்பட்டதை, பலரும் கண்டித்துள்ளனர்.
