ADDED : ஜூலை 15, 2025 04:38 AM
கோல்டு நகரின் வடக்கில் உள்ள பெமல் நகர் ஆலமரம் பகுதி முதல் கிருஷ்ணாபுரம் வரையில் மைன்ஸ் லேண்ட் என்கிறாங்க விபரம் அறிந்தவங்க. ஆனால், மொத்த நிலமும் அங்கு தனியார் வசமா மாறிட்டதா சொல்றாங்க.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் 'ஸ்வாஹா' செய்திருக்கும் தகவல் 'லேட்டா' கசிய, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆட்டம் கண்டிருக்கு. இதுல, ஆக்கிரமிப்பு செய்தவங்களிடமே பணம் பறிக்க சிலர் 'ரூட்' போட்டு இருக்காங்க. நிலம் சுருட்டும் 'மாபியா கும்பல்' கோல்டு சிட்டியில் அதிகமாகிட்டாங்களாம். இதனை தடுத்து நிறுத்த யார் வருவாங்களோ.
கோல்டு சிட்டியில் கவுடனகெரே ஏரி இருந்த இடமே தெரியல. ஆசையை வெறுத்த மகான் கவுதமர். அவரது பெயரில் தான் ஒரு நகரம் ஏற்படுத்தி இருக்காங்க.
இந்த நகரோடு ஏரியை சேர்த்து பிளாட் போட்டு விற்று தின்னுட்டாங்க. அதை பல லட்சம் கொடுத்து வாங்கி வீடு கட்டினவங்க தான் சிக்கலில் தவிக்கிறாங்க.
ஏரியை காணோம்னு மாவட்ட கலெக்டர் வரை புகார் போயிருக்கு. அந்த புகாரை விசாரிக்க ஆபீசர்களுக்கும், ஆக்கிரமிப்பில் இருக்கிறவங்களுக்கும் உத்தரவு போயிருக்கு. ஏரி நிலம் மீட்கப்படுமா அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை யை வாங்கிக் கொண்டு விட்டு தருவாங்களா. எப்படியோ மழை வெள்ளத்தில் கட்டடங்கள் மிதக்கும் முன் உஷார் நடவடிக்கை எடுப்பாங்களான்னு நகரின் சொந்தக்காரங்க பேசுறாங்க.
முனிசி., சார்பில் முக்கிய இடங்களில் ஸ்டீல் குப்பை தொட்டிகள் வைத்தாங்க. அந்த தொட்டிகள் எங்கேன்னு காணல. கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டினா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்னு மாவட்ட கலெக்டரே உத்தரவு போட்டிருக்காரு. குப்பைகள் அகற்ற முறையான திட்டம் கொண்டு வரலாமே. ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவில் கழிப்பறை கட்டியதை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கல. இப்படி இருந்தால் எப்படி சுகாதாரம் மேம்படும்.