sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தங்கவயல் செக் போஸ்ட்

/

 தங்கவயல் செக் போஸ்ட்

 தங்கவயல் செக் போஸ்ட்

 தங்கவயல் செக் போஸ்ட்


ADDED : மார் 03, 2026 06:23 AM

Google News

ADDED : மார் 03, 2026 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிதி இல்லையா?

த ங்கவயல் நுழைவு வாயில் போல மின்னொளியில், 'ஐ லவ் கே.ஜி.எப்.,' என்று உரிகம் ஐந்து விளக்கு பகுதியில் அடையாளம் காட்டியிருக்காங்க. ஆனால், இதுவரை தங்கவயலின் எல்லை பகுதிகளில் நுழைவு வாயில் எதுவென முனிசி., சொல்ல தயங்குவது புரியாத புதிரா இருக்குது.

ப.பேட்டை டவுன் சபையின் நுழைவு வாயிலில், 'உங்களை வரவேற்கிறது' என்று அவர்கள் நுழைவு வாயில் வைத்துள்ள போது, பழம் பெருமை பேசுற தங்கம் விளையும் அற்புதமான சிட்டியின் அடையாளம் காட்ட ஏன் தயக்கமோ. இதில் என்ன கவுரவ குறைச்சலோ.

ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 100 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்களை பேசுகிறவர்கள் நுழைவு வாயிலுக்கென நிதி ஒதுக்கினால் யார் குடி கெடப்போகுது.

சாலை, கால்வாய், தெருவிளக்கு சீர் படுத்தினதையே சாதனை என்கிறவங்க, நுழைவு வாயில் அமைக்க பல முறை தீர்மானம் நிறைவேற்றியும் அமல்படுத்தாமல் காலாவதி ஆக்கலாமா.

அமரர் ஊர்தி எங்கே?

இ றந்தவர் சடலத்தை சுடுகாடு, கல்லறை தோட்டங்களுக்கு எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி தேவை என்ற வாத விவாதம் முனிசி.,யில் நடந்து, தீர்மானித்து, பல ஆண்டுகள் முடிந்தன. அப்படி இருந்தும் ஒவ்வொரு கூட்டத்திலும் இதே பிரச்னை பற்றி பேசுறாங்க. பழைய வாகனங்களை பழுது பார்த்து அமரர் ஊர்தியாக பயன்படுத்தலாமென அறிவிச்சாங்க. அது இன்னும் அமலுக்கு வரவே இல்லை. அவ்வப்போது கூடுகிற முனிசி., கூட்டங்களில் இதனே வலியுறுத்துவதே வழக்கமாக போனது. ஆயினும் அமரர் ஊர்தி தயார் ஆகவே இல்லை. பணம் இருந்தும் பயன்படுத்த மனம் இல்லாத முனிசி.,யாக இருந்து வருகிறது.

'மியூசிக்கல

சேர

' போட்டி

ப. பேட்டையில் இருந்து மூன்று முறை அசெம்பிளிக்கு தேர்வானவர், மந்திரி நாற்காலிக்காக முயற்சித்து வர்ராரு. கோல்டு சிட்டியில் இருந்து இரு முறை தேர்வானவருக்கு பெண் இட ஒதுக்கீட்டில் மந்திரி நாற்காலி வேணுமாம். கோலாரில் 4 பேரில் ஒருத்தருக்காச்சும் மந்திரி பதவி கொடுக்க வேணும்னு 'மியூசிக்கல் சேர்' போட்டி நடந்து வருது.

கோல்டு சிட்டி அசெம்பிளிக்காரரின் நைனா, ஏற்கனவே மந்திரி பதவியில் இருப்பதால் ஒரே குடும்பத்தில் இருவருக்கு மந்திரி பதவியா என்ற கேள்வி முட்டுக் கட்டையா இருக்குதாம்.

பல பதவிகளை பார்த்த நைனாவுக்கு, வயசானதால் மகளுக்கு விட்டுத் தருவாரா. அவரோட குடும்பத்தில் பேச்சு நடத்தி தீர்வு காண வேணுமென சிலர் யோசனை சொல்லி இருக்காங்க.

கோல்டு சிட்டி போல்டு அசெம்பிளிக்காரர் என்ன தான் தைரியசாலியாக இருந்தாலும், தொகுதிக்குள் ஆல் ரவுண்டர் அதிகாரம் செலுத்துபவர் அவரில்லையாம்.

அசெம்பிளிக்காரருக்கு மந்திரி பதவி கிடைத்தால் இருக்கை மட்டுமே அசெம்பிளிகாரருக்கு. முழு அதிகாரம் வேறொருவரிடம் சென்றிடும்னு பேச்சு ஓடிக் கொண்டிருக்குது.

மாலுாரார், கோலார்காரர் என இவர்களும் கூட தலா இருமுறை அசெம்பிளிக்கு தேர்வானவர்களே. கோலார் மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் 4 பேர் இருந்தும் ஒருத்தருக்கும் மந்திரி பதவி தராமல் காலம் தள்ளிட்டாங்க; மீண்டும் மந்திரி பதவி கேட்க துளிர் விடும் காலம் துவங்கி இருக்கிறது.






      Dinamalar
      Follow us