தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் செக் போஸ்ட்

 தங்கவயல் செக் போஸ்ட்

 தங்கவயல் செக் போஸ்ட்


ADDED : மார் 11, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எங்கே காணோம்?



கோல்டு சிட்டி ரா.பேட்டையில் பகவத் கீதையின் மகிமைக்காக ஏற்படுத்திய சாலை-யில், அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவிலில் 91வது ஆண்டு பிரம்மோத்சவம் நடந்து வருது.

இதன் ரத உத்சவம் மாநில அரசுடையது. இதனை துவக்கி வழிநடத்தி செல்லும் பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிக்கும் உண்டு. ஆனால், வட்டார நிர்வாக அதிகாரியோ, அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியோ அங்கு வரவே இல்ல.

மக்கள் பிரதிநிதியான அசெம்பிளிகாரர் கூட ரத உத்சவம் கோவில் வந்தடைந்த போது தான் வந்தாரு. இவர் நடையை சாத்தவா வந்தாருன்னு விபரம் அறிந்தவங்க பேசாமலா இருப்பாங்க.

பொறுப்பானவங்க அலட்சியம் காட்டுறாங்களேன்னு பக்தர்களின் அங்கலாய்ப்பா இருந்து வருது. அலட்சிய போக்குக்கு தெனாவட்டு தான் காரணம்னு, 'தாமரை' பக்தர்கள் சொல்றாங்க. இதையே பிரசாரமா பேசி வராங்க.

எது உண்மையோ?



கை கட்சிக்கு நகர புதிய தலைவரை நியமித்திருக்காங்க. ஏற்கனவே அதிருப்தியில் இருக்கிறவங்கள சமாதானப்படுத்தாமல், ஒரேயொரு சதவீத மக்கள் தொகையும் இல்லாத சமுதாயத்தை சேர்ந்தவருக்கு தலைவர் பதவி கொடுத்திருப்பதாக அதிருப்தி டீம் புலம்புது.

ஏற்கனவே, தலைவராக இருந்தவருக்கு புதிய தலைவர் நியமன விஷயமே தெரியாதாம். இதற்காக கட்சிக்காரர்களை அழைத்து ஆலோசனையோ, கட்சிக்காரங்க விருப்பத்தையோ கேட்காமல், 'ஆல் இன் ஆல்- பவர்' காட்டியிருப்பதாக புகைச்சல் இருக்குது.

அடுத்து வரும் பொதுத் தேர்தல்களின் போது வீடு வீடா ஓட்டு கேட்க, பூத் கமிட்டிக்கே ஆள் கிடைக்காமல் திண்டாடும் போதுதான் கட்சிக்காரங்க சக்தி தெரியப் போகுதுன்னு அதிருப்திக்கார லீடர்கள் பேசுறாங்க.

ஏற்கனவே முனிசி., தலைவரா இருந்தவரு மூட்டை கட்டிக் கொண்டார். து.த., இருக்கும் இடம் தெரியாமல், காரை விட்டு கீழே இறங்கல. முனிசி., தேர்தலுக்கு வார்டுக்கு 3 புது வேட்பாளரை தயார்படுத்தி பிரித்தாளும் துக்ளக் வேலையை செய்வதாகவும் கைகாரங்க பேசிக்கிறாங்க. இதில் எது உண்மையோ?

ம.மந்திரி ஆதரவு யாருக்கு?



கோல்டு சிட்டியில் கடந்த அசெம்பிளி தேர்தலில், புல்லுக்கட்டு வேட்பாளராக வந்த வெளியூர்காரர், திடீரென காணாமல் மாயமானார். ஓட்டு கேட்க கூட ஆளில்லாமல் போனது. மீண்டும், அதே நபர் திடீரென கோல்டு சிட்டிக்குள் நடமாட, தனி கோஷ்டியை ஏற்படுத்தி இருக்காரு.

இவரோட முதல் வேலையாக புல்லுக்கட்டு கட்சியின் ஒரு கோஷ்டி தலைவரை தலைதுாக்க விடாமல் தடுக்க, வசூல் வேட்டை நடத்தி, பெரிய தொகையை புல்லுக்கட்டின் ம.மந்திரிக்கும், கோலார் செங்கோட்டைக்காரருக்கும் வழங்குகிற வேலையை செய்து வருவதாக, செங்கோட்டை சபாநாயகருக்கு ஊழல் புகாரை பத்த வெச்சிட்டாரு.

அந்த புகார் ம.மந்திரிக்கு தெரிய வந்து, 'ஷாக்' ஆகிட்டார். இதென்ன புது கதைன்னு விசாரணை நடத்த வெச்சாரு. காலமெல்லாம் கட்சிக்காக பாடுபட்ட லோக்கல் தலைவர் பேரில் வந்த புகாரால், அவருக்கு ஜீரணிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பழைய லோக்கல் புல்லுக்கட்டு காரர்கள் எல்லாம் புதியவருக்கு எதிராக ஒண்ணு கூடியிருக்காங்க. ஆனாலும், ம.மந்திரி யார் பக்கம் என்பதே மில்லியன் டாலர் கேள்வியா இருக்குது!

ஊழல் கதை எப்ப வருமோ?



கோல்டு சிட்டி கை கட்சியினரை வழக்கமாக எல்லை தாண்டாமல், உள்ளூரிலேயே அடக்கி வைக்கும் வேலையை செய்து வருவது ஊரறிந்த பழைய கதை. ஆனால், அந்த கட்சியின் சர்வாதிகார போக்குக்கு, 'குட் பை' சொன்னவரை, எடுத்த எடுப்பிலேயே மாநில கேபிடல் சிட்டி தாமரை பவனுக்கு அழைத்துக் கொண்டாங்க.

மாநில அளவில் பூ கட்சி வலையில், பெரிய மீன் சிக்கியிருக்கு. அது எலியா, புலியா என்பது போக போகத்தான் தெரிய போகுது. முனிசி.,யை கைப்பற்ற இவர் ஒப்புதல் தெரிவித்தாராம். அதை மாநில கேபிடல் ஏற்றுக் கொண்டது. ஆனால் கோல்டு சிட்டியில் இன்னும் அவர் தன்னிலை விளக்கம் தரவில்லையே.

இடம் தாவியதன் மர்மம் இன்னும் வெளி வரவில்லை. இவர் வசம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பு, 'லுாட்டி' தகவல்கள் எப்போ வர போகுதோ. ஜனங்க மத்தியில் எதிர்பார்ப்பு இருக்குது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us