ADDED : ஜூன் 12, 2026 10:48 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: தங் கவயல் போலீஸ் மாவட்ட அலுவலகத்தில் நேற்று, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவாம்ஷு ராஜ்புத் உறுதி மொழியை வாசித்தார். போலீசார் மற்றும் பிறர் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், போலீஸ் துறையின் உதவி நிர்வாக அதிகாரி ஜி.விஸ்வநாத், இன்ஸ்பெக்டர் தயானந்த், மாவட்ட போலீஸ் அலுவலகத்தின் அனைத்து அதிகாரிகள், போலீஸ் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
அதேபோல, தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் உள்ள ஒன்பது போலீஸ் நிலையங்களிலும், உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
