/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எரிக்கப்பட்டவை வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.டி., விசாரணையில் அம்பலம்
/
எரிக்கப்பட்டவை வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.டி., விசாரணையில் அம்பலம்
எரிக்கப்பட்டவை வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.டி., விசாரணையில் அம்பலம்
எரிக்கப்பட்டவை வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.டி., விசாரணையில் அம்பலம்
ADDED : அக் 18, 2025 11:14 PM

கலபுரகி: பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுபாஷ் குத்தேதார் வீட்டின் அருகே எரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் வாக்காளர் பட்டியல் என்பது எஸ்.ஐ.டி., விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கலபுரகி மாவட்டம், ஆலந்த் தொகுதி ஓட்டுத்திருட்டு குறித்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள், கடந்த சில நாட்களாக விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் குப்பி காலனியில் முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுபாஷ் குத்தேதார், அவரது மகன்களான ஹர்ஷானந்த், சந்தோஷ் ஆகியோரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, சுபாஷ் வீட்டின் அருகில் ஏராளமான ஆவணங்கள் எரிக்கப்பட்டன. என்ன ஆவணங்கள் எரிக்கப்பட்டது; யார் எரித்தனர் என்ற கேள்வி எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், எரிக்கப்பட்ட ஆவணங்கள் ஆலந்த் தொகுதியின் வாக்காளர் பட்டியல் என்பது தெரிய வந்தது. இது விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும், அமர்ஜா ஆற்றின் பாலங்களின் ஓரத்தில் எரிக்கப்பட்ட ஆவணங்களின் துண்டுகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
விசாரணையில், ஆற்றுப்பகுதியில் ஏராளமான ஆவணங்கள் கிடந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின், ஆற்றுப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது குறித்த விசாரணையில், இரவோடு, இரவாக வாகனத்தில் வந்தவர்கள் பாலத்தில் இருந்து ஆவணங்களை வீசி விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியது. அதுபோல, சுபாஷ் குத்தேதாருக்கு சொந்தமான பாரிலும் சோதனை நடந்தது. அங்கும் சில ஆவணங்கள் சிக்கின.
எனக்கு தெரியாது! காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் அமைச்சராக முயற்சித்தார். இதற்காக, ராகுலிடம் சென்று பொய் புகார் கூறினார். அவரும் அதை நம்பி, ஓட்டு மோசடி என கூறிவிட்டார். ஓட்டு மோசடிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. தீபாவளி பண்டிகையின்போது யாராவது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து இருப்பர். இந்த ஆவணங்கள் எரிக்கப்பட்ட விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ராகுலிடம் நற்பெயர் வாங்குவதற்காக முதல்வர் சித்தராமையா எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அனுமதி அளித்தார். சுபாஷ் குத்தேதார், முன்னாள் எம்.எல்.ஏ., பா.ஜ.,