ADDED : ஜூலை 10, 2025 11:11 PM

சித்தராமையா ஐந்து ஆண்டுகள் முதல்வராக தொடருவார் என்று கட்சி மேலிடம் கூறி உள்ளது. முடிந்துபோன அத்தியாயத்தை மீண்டும் பேச தேவையில்லை. கட்சியில் உள்ள 10 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் தான், முதல்வர் மாற்றம் குறித்து பேசி வருகின்றனர். 2023ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த போது, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. அப்போது முதல்வராக சித்தராமையா வர வேண்டும் என்று பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்தனர். இதனால் அவர் முதல்வரானார்.
இதுபோன்று 'தனக்கும் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிக்கின்றனர்' என, சிவகுமார் கூறியிருக்கலாம்.
மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து பேசியுள்ளார். இதனால் அனைவருக்கும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சட்டசபை கூட்டத்தில் பேச முடியாததை, அவரிடம் தெரிவித்துள்ளனர். ஒரு வகையில் இந்த சந்திப்பு நல்லது தான்.
அமைச்சர்கள் மீது சில எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவர்களை அழைத்து, பிரச்னையை தீர்த்து வைக்க ஆலோசனை நடத்துவோம்.
சதீஷ் ஜார்கிஹோளி,
பொதுப்பணித் துறை அமைச்சர்